Thalaivar 170: விஜய் வளர்ச்சியை கவனிக்கும் ரஜினி... தலைவர் 170-ல் அமிதாப் நடிக்க இதுதான் காரணமா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி ஜெயிலர் படப்பிடிப்பை முடித்துவிட்டு லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்.
லால் சலாம் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் மட்டுமே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து தசெ ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவிருப்பதற்கு விஜய் தான் காரணம் என சொல்லப்படுகிறது.
அமிதாப் நடிக்க விஜய் தான் காரணம்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து லால் சலாம் படமும் இந்தாண்டுக்குள் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்தப் படம் தொடங்கிய போது ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகா உள்ளிட்ட சிலர் மட்டுமே நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், கமல் நடித்த விக்ரம் மல்டி ஸ்டார் படமாக ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானது. அடுத்து விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ். இதுவும் மிகப் பெரிய மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருகிறது.
இதனால் தான் ஜெயிலர் படத்தில் மோகன் லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார் என பான் இந்தியா நடிகர்களை களமிறக்கியுள்ளாராம் நெல்சன். அதே பார்முலாவில் தான் தலைவர் 170 படத்தையும் எடுக்கலாம் என ரஜினி அட்வைஸ் செய்துள்ளாராம். இதனால் தான் தலைவர் 170 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க சீயான் விக்ரம், அர்ஜுன் ஆகியோருக்கு வாய்ப்புச் சென்றுள்ளது. ஆனால், அவர்கள் நோ சொன்னதால் அமிதாப் பச்சனிடம் ரஜினி பேசி ஓக்கே செய்துவிட்டாராம்.

அதேபோல், கடந்த சில வருடங்களாகவே ரஜினியின் மார்க்கெட்டை விஜய் ஓவர்டேக் செய்துவிட்டதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். முதல் நாள் ஓபனிங், பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட், ப்ரீ தியேட்டர் பிசினஸ் என ஆல் ஏரியாவிலும் அடித்து நொறுக்கி வருகிறார் விஜய். அதுமட்டும் இல்லாமல் சினிமாவை தொடர்ந்து அரசியலில் களமிறங்கவும் விஜய் பிளான் போட்டு வருகிறாராம்.
இதையெல்லாம் கூர்மையாக கவனித்துக்கொண்டிருக்கும் ரஜினி, சினிமாவில் இருந்து ஓய்வுபெறும் முன் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துவிட வேண்டும் என முடிவெடுத்துள்ளாராம். இதனால் தான் ஜெயிலர், தலைவர் 170 படங்களில் அதிக கவனத்தில் வைத்துள்ள சூப்பர் ஸ்டார், அடுத்து லோகேஷ் இயக்கத்திலும் ஒரு படம் நடித்துவிட ரெடியாகிவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு பக்கம் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











