தலைவர் 171வும் எல்சியூ தானா?.. தீயாய் பரவும் தகவல்.. சூப்பர்ஸ்டாரும் உலகநாயகனும் ஒரே படத்திலா?
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைவர் 171 படத்தில் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் அந்தப் படம் LCUவா என்கிற கேள்வி தற்போது கிளம்ப ஆரம்பித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படமே எல்சியூ படமா இல்லையா என்கிற விவாதம் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. லியோ கிளைமாக்ஸில் ரோலக்ஸ் சூர்யா எல்லாம் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும், பகத் ஃபாசில், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கேமியோவும் லியோ படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், லியோ திரைப்படம் எல்சியூவாக இருக்காது இது ஸ்டாண்ட் அலோன் கேங்ஸ்டர் திரைப்படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
தலைவர் 171 எல்சியூவில் வருமா: ஆனால், ரஜினிகாந்த்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகும் தலைவர் 171 திரைப்படம் எல்சியூவாகத்தான் இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. கமல்ஹாசனின் விக்ரம் படத்தை போலவே ஜெயிலர் திரைப்படத்தை மல்டி ஸ்டார்டர் படமாக ரஜினிகாந்த் உருவாக்கிய நிலையில், தலைவர் 171 திரைப்படம் கண்டிப்பாக எல்சியூ திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவானாலும் எல்சியூவுக்குள் தலைவர் 171 வரும் என்றும் உறுதியாக கூறுகின்றனர். லோகேஷ் கனகராஜின் பக்கா பிளானே அதுதான் என்றும் மேலும் இந்தப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனையும் உள்ளே கொண்டு வரும் திட்டத்தையும் லோகேஷ் கனகராஜ் வைத்திருக்கிறார் என இப்போதே ஏகப்பட்ட கதைகளை சினிமா பிரபலங்கள் கிளப்ப ஆரம்பித்துள்ளனர்.

ரஜினி - கமல் ஒரே ஃபிரேமில்: லியோ திரைப்படம் ரிலீஸானால் தான் இதனை முழுவதுமாக உறுதி செய்ய முடியும் என்றும் அந்தப் படம் எல்சியூவாக இருந்தால் கண்டிப்பாக தலைவர் 171 படமும் எல்சியூவாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
தலைவர் 170 படம் தான் இப்போதைக்கு ரஜினியின் மெயின் ஃபோகஸ் என்றும் அந்த படம் முடியும் போது தான் லோகேஷ் கனகராஜ் முழு கதையே முடித்து தலைவர் 171 படத்தை ஆரம்பிப்பார் என்றும் கூறுகின்றனர். தலைவர் 171 திரைப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் படமாக இருந்தால் நல்லா இருக்கும் என்பது தான் பலரது விருப்பமாக உள்ளது. கோலிவுட்டிலும் அவெஞ்சர்ஸ் படம் போல ஒரு படத்தை லோகேஷ் கனகராஜ் கொடுப்பதற்கான சரியான வாய்ப்பு இது எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











