Thalaivar 171: "லோகேஷ் தான் ஷார்ப்பான புள்ளீங்கோ... அடுத்து தலைவர் காலி..” ப்ளூ சட்டை மாறன் பஞ்ச்!

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் நேற்று வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் LCU-ன் கீழ் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 Thalaivar 171: Blue Sattai Maran Trolls that Lokeshs Thalaivar 171 will disaster

லியோவை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ்.

இந்தப் படம் குறித்து லியோ விமர்சனத்தில் ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்துள்ளார்.

லோகேஷ் தான் ஷார்ப்பான புள்ளீங்கோ
மாநகரம் திரைப்படம் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், குறுகிய காலத்தில் கோலிவுட்டின் டாப் மோஸ்ட் இயக்குநர்களில் ஒருவராகிவிட்டார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என லோகேஷின் கிராஃப் அடுத்தடுத்து உச்சம் தொட்டது. முக்கியமாக LCU எனப்படும் லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸ் கான்செப்ட் ரசிகர்களிடம் பெரிய ஹைப் கொடுத்தது.

அதன்படி, கைதி, விக்ரம் படங்களைத் தொடர்ந்து விஜய்யின் லியோவையும் LCU-ன் கீழ் இயக்கியுள்ளார் லோகேஷ். விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். நேற்று வெளியான லியோ படத்துக்கு அனைத்து ஏரியாக்களிலும் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. அதேநேரம் இந்தப் படத்துக்கு சில நெகட்டிவான விமர்சனங்களும் கிடைத்துள்ளன.

விஜய்யின் லியோ குறித்து விமர்சனம் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், மேக்கிங் தவிர மற்ற எல்லாமே சொதப்பல் என்றுள்ளார். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக லோகேஷ் நிலைமை ஆகிவிட்டதாகவும் விமர்சனம் செய்திருந்தார். அதேபோல், லியோவில் வில்லன்கள் யாரும் செட்டாகவில்லை. LCUன் கீழ் இந்தப் படத்தை இயக்கியதிலும் ஒர்த் இல்லை என விமர்சித்திருந்தார்.

இறுதியாக ப்ளூ சட்டை மாறன் கொடுத்த பஞ்ச் ஒவ்வொன்றும் ரஜினி ரசிகர்களை கலங்கடித்துள்ளது. அதாவது லோகேஷ் அடுத்து ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார். தலைவர போடறதுக்கு இப்போதைக்கும் நம்ம ஏரியாவுல இருக்குற ஷார்ப்பான புள்ளிங்கோ லோகேஷ் தான். இதே Form-ல் போய்ட்டு தலைவரையும் அட்டாக் பண்ணிடுங்க என கலாய்த்துள்ளார்.

விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன், அடுத்து ரஜினியின் ஜெயிலரை இயக்கினார். அதேபோல் விஜய்யின் லியோவை இயக்கிய லோகேஷ், அடுத்து ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார். நெல்சன் ஜெயிலர் படத்தை சூப்பர் ஹிட் கொடுத்தது போல, லோகேஷும் தலைவர் 171 திரைப்படத்தை ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X