Thalaivar 171: ‘ரஜினிக்கு லோகேஷ் படம் பண்றது எனக்கு தான் பெருமை..” தலைவர் 171 ஹைப் கொடுத்த கமல்!

துபாய்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு பிப்ரவரியில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

முன்னதாக கமலின் விக்ரம் படத்தை இயக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில், தனது ரசிகரான லோகேஷ், ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளது குறித்து கமல்ஹாசன் மனம் திறந்துள்ளார்.

 Thalaivar 171: Kamal Haasan about Superstar Rajinis Thalaivar 171

தலைவர் 171 படம் எனக்கு தான் பெருமை : கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் கலக்கி வரும் நிலையில், கமல் உலகநாயகனாக மிரட்டி வருகிறார். இருவருமே ஆரம்ப காலங்களில் இருந்து நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1980களில் பல படங்களில் இணைந்து நடித்துள்ள ரஜினியும் கமலும், அதன்பின்னர் வேறு வேறு ரூட்டில் பயணிக்கத் தொடங்கினர். இந்நிலையில் தலைவர் 171 படம் குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் மனம் திறந்துள்ளார்.

துபாயில் 2023ம் ஆண்டுக்கான சைமா விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் விக்ரம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதையும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருதையும் கமல்ஹாசன் வென்றார். அதேபோல், சிறந்த இயக்குநருக்கான விருதையும் விக்ரம் படத்திற்காக லோகேஷ் கனகரஜ் வென்றார். கடந்தாண்டு வெளியான விக்ரம் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

விக்ரமை தொடர்ந்து விஜய் நடிப்பில் லியோவை இயக்கியுள்ள லோகேஷ், அடுத்து ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு பிப்ரவரியில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், ரஜினியுடன் லோகேஷ் இணைவது குறித்து கமல்ஹாசன் பேசியது வைரலாகி வருகிறது. அதாவது "உங்களின் ரசிகரான லோகேஷ் ரஜினியின் படத்தை இயக்குகிறாரே" என என்னிடம் கேட்கப்படுகிறது.

 Thalaivar 171: Kamal Haasan about Superstar Rajinis Thalaivar 171

"காமன் ரசிகர்களுக்கு அவ்வளவு தான் தெளிவு உள்ளது. ஏற்கனவே நான் கூறியுள்ளேன், எங்கள் முந்தைய தலைமுறையில் என்னையும் ரஜினியையும் போல நண்பர்கள் இருந்தது கிடையாது. இனியும் அப்படி வர வாய்ப்பில்லை என சவால் விடுத்திருந்தேன். இப்போது எனது ரசிகர், என்னுடைய நண்பருக்கு படம் பண்றது எனக்குத்தான் பெருமை. அதனை நாங்கள் புரிந்துகொண்ட அளவிற்கு மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லை" என கமல்ஹாசன் பேசியிருந்தார்.

கமல் இப்படி சொன்னதும், மேடைக்கு எதிரே அமர்ந்திருந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், எழுந்து நின்று வணக்கத்துடன் நன்றி கூறினார். தலைவர் 171 படம் குறித்து உலகநாயகன் கமல் மனம் திறந்து பேசியது, சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தலைவர் 171ல் ரஜினிக்காக கமல்ஹாசன் ஒரு கேமியோ ரோலில் நடிப்பாரா எனவும் எதிர்பார்க்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X