Thalaivar 171: முதலில் அமிதாப்... இப்போ கேஜிஎஃப் யாஷ்... தலைவர் 171ல் ரஜினி போடும் புது கணக்கு!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது.

இன்னொரு பக்கம் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக தசெ ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170, லோகேஷ் டைரக்‌ஷனில் தலைவர் 171 ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.

இதில், தலைவர் 171 படத்தில் கேஜிஎஃப் ஹீரோ யாஷ் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

 Thalaivar 171: Lokesh Kanagaraj Is Planning To Cast Yash In Rajinis Thalaivar 171

அமிதாப்பை தொடர்ந்து கேஜிஎஃப் யாஷ்: முன்பெல்லாம் வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டும் நடித்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, இப்போது அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகியுள்ளார். நெல்சனின் ஜெயிலரில் நடித்து முடித்த கையோடு, ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்து வருகிறார். ஜெயிலர் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், லால் சலாம் இந்தாண்டு இறுதியில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதேபோல், லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் ஹீரோவாக நடித்துள்ளனர். தொடர்ச்சியாக மல்டி ஸ்டார்ஸ் படங்களாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். கடந்த சில வருடங்களாகவே மல்டி ஸ்டார்ஸ் படங்கள் தான் ரசிகர்களிடம் ட்ரெண்டாகி வருகின்றன.

கமலின் விக்ரம், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் மிகப் பெரிய வெற்றிப் பெறவும் இதுதான் காரணம். அதனால் தான் ஜெயிலரில் ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சிவராஜ்குமார் என மற்றமொழி சூப்பர் ஸ்டார்களையும் சேர்த்துக்கொண்டார் ரஜினி. இந்நிலையில் த செ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்திலும் அமிதாப் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தலைவர் 170 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க சீயான் விக்ரம், அர்ஜுன் ஆகியோருக்கு வாய்ப்புச் சென்றுள்ளது. ஆனால், அவர்கள் நோ சொன்னதால் அமிதாப் பச்சனிடம் ரஜினி பேசி ஓக்கே செய்துவிட்டாராம். அதேபோல், ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இதுவும் மல்டி ஸ்டார்ஸ் படமாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என வரிசையாக லோகேஷ் இயக்கும் படங்கள் எல்லாமே மல்டி ஸ்டார்ஸ் படங்கள் தான். அதனால், தலைவர் 171 படத்தில் ரஜினியுடன் தரமான கூட்டணியை களமிறக்க லோகேஷ் முடிவு செய்துள்ளாராம். அதன்படி இதில் முதலில் இருப்பது கேஜிஎஃப் ஹீரோ யாஷ் என தகவல் வெளியாகியுள்ளது. தலைவர் 171 படத்தில் மிக முக்கியமான கேமியோ ரோலில் நடிக்க யாஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் லோகேஷ். அதனால், இக்கூட்டணி விரைவில் கன்ஃபார்ம் ஆகும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X