Thalaivar 171: ரஜினியை “ரகசியமாக” சந்தித்தாரா லோகேஷ்... தலைவர் 171க்கு கிடைத்த க்ரீன் சிக்னல்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஒரே நேரத்தில் மூன்று படங்கள் உருவாகி வருகின்றன.

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்து லால் சலாம், தலைவர் 170 படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

தனது கடைசிப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் நன்றாக இருக்கும் என ரஜினி கூறியதாக சொல்லப்படுகிறது.

இதுபற்றிய செய்திகள் வெளியாகி வந்த நிலையில், ரஜினியை லோகேஷ் கனகராஜ் ரகசியமாக சந்தித்துள்ளதாக தெரிகிறது.

 ரஜினி - லோகேஷ் கூட்டணி

ரஜினி - லோகேஷ் கூட்டணி

கோலிவுட் மட்டுமின்றி இந்தியளவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி, ஜெயிலர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இன்னொரு பக்கம் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. ஜெயிலர், லால் சலாம் படங்களை முடித்துவிட்டு தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்திலும் நடிக்கவுள்ளார். ஜெயிலர், லால் சலாம், தலைவர் 170 படங்களின் ரிலீஸ் தேதி வரும் முன்னரே ரஜினி - லோகேஷ் கூட்டணி குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

 ரஜினியுடன் ரகசிய சந்திப்பு

ரஜினியுடன் ரகசிய சந்திப்பு

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என இதுவரை இயக்கிய 4 படங்களிலும் தனி முத்திரைப் பதித்த லோகேஷ், தற்போது விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் படத்திற்கு முன்னதாகவே ரஜினியை இயக்க ஆசைப்பட்டார் லோகேஷ். ஆனால், அப்போது அவரது கனவு கை கூடாமல் போய்விட்டது. இப்போது ரஜினியே லோகேஷிடம் ஒரு படம் இயக்க முடியுமா எனக் கேட்டுள்ளாராம். இதுதொடர்பாக இருவரும் ஏற்கனவே சந்தித்து பேசிய நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இன்னொரு ரகசிய சந்திப்பு நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 தலைவர் 171 க்ரீன் சிக்னல்

தலைவர் 171 க்ரீன் சிக்னல்

லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்ட லோகேஷ் தற்போது சென்னையில் இருக்கிறார். அதேபோல், ரஜினியும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்புக்காக கொச்சி சென்று விட்டு சில தினங்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார். ரஜினி தற்போது மும்பையில் இருந்தாலும், லோகேஷை சந்தித்த போது தலைவர் 171 படத்துக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ரஜினி - லோகேஷ் இணையும் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

 2024 இறுதியில் படப்பிடிப்பு

2024 இறுதியில் படப்பிடிப்பு

லியோ ஷூட்டிங் முடிந்ததும் உடனடியாக கார்த்தியின் கைதி 2 படத்தை தொடங்கவுள்ளார் லோகேஷ். இன்னொரு பக்கம் தலைவர் 171 படத்திற்கு ஸ்க்ரிப்ட் எழுத தொடங்கிவிட்டாராம். இதுவும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. ரஜினிக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் படமாக இது இருக்க வேண்டும் என லோகேஷ் ஒரு முடிவில் இருப்பதாக தெரிகிறது. அதேபோல், ரஜினி - லோகேஷ் கூட்டணி இனைந்தால் அதில் கமலும் ஒரு சீனில் நடித்துவிடுவார் என லோகேஷ் டீமில் இருந்து செய்தி வெளியாகி வைரலாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X