ஜப்பான் வாடை வருதே.. தலைவர் 171 போஸ்டரை ட்ரோல் செய்யும் விஜய் ஃபேன்ஸ்.. லியோவுக்கு பதிலடியா?

சென்னை: 'இனிமேல்' பாடலில் லோகேஷ் கனகராஜ் பர்ஃபார்மன்ஸை பார்த்து அந்த பேச்சுக்களே இன்னும் அடங்காத நிலையில், அடுத்த அதிரடியாக தலைவர் 171 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையே வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளார் லோகி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து அனிருத் இசையமைத்து வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த நிலையில், தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் படமாக தலைவர் 171 வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

சூர்யாவை வைத்து ஜெய் பீம் எனும் சமூக அக்கறை கொண்ட படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். ஏப்ரல் அல்லது மே மாதம் இறுதிக்குள் அந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thalaivar 171 looks like Karthi s flop movie Japan trolledy by Vijay fans

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைவர் 171 வது படத்தில் நடிக்கப் போவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் நேற்று வெளியான அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அதற்கு எதிரான ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.

தலைவர் 171 டிகோடிங்: போதைப்பொருள் கடத்தலை மையமாக வைத்து எல்சியூவை உருவாக்கிய லோகேஷ் கனகராஜ் மீது ஏகப்பட்ட புகார்களும் எழுந்துள்ள நிலையில், ரஜினிகாந்தை வைத்தும் கேங்ஸ்டர்படத்தை தான் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். நேற்று வெளியான அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள், தங்கத்தால் ஆன வாட்ச்களை வைத்தே கைதி சங்கிலியாக ரஜினிகாந்தின் கைகள் கட்டப்பட்டு இருப்பதை பார்க்க ரசிகர்கள் ரோலக்ஸ் அண்ணன் டீலக்ஸா என கேட்டு வருகின்றனர். மேலும், தங்கம் இருப்பதால், இந்த படம் தங்கக் கடத்தலை மையமாக வைத்த படமாகத்தான் இருக்கும் என பலரும் டிகோட் செய்து வருகின்றனர்.

தாறுமாறா இருக்காரு தலைவரு: நெல்சன் இயக்கத்தில் நடித்த ரஜினிகாந்த் வயதான தோற்றத்திலேயே அந்த படத்தில் நடித்திருந்தார். மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான லால் சலாம் படத்திலும் ரஜினிகாந்துக்கு வயதான லுக் தான். 72 வயதுக்கு ஏற்ற தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் சரியாக நடித்து வருகிறார் என பாராட்டுக்கள் குவிந்து வந்த நிலையில், மீண்டும் ரஜினிகாந்துக்கு எந்திரன் காலத்து யங் லுக்கை கொடுத்து தாறுமாறு செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். டெனிம் சட்டையில், காதில் கடுக்கண் எல்லாம் போட்டுக் கொண்டு மாஸ் காட்டுகிறார் மனுஷன்.

ஜப்பான் வாடை வருது: ஒரு பக்கம் தலைவர் 171 படத்தை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி படுதோல்வி அடைந்த ஜப்பான் படத்தின் வாடை ஹெவியாக அடிக்கிறது என விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பங்கம் பண்ணி வருகின்றனர். கார்த்தி நடித்த ஜப்பான் படத்திலும் தங்க கடத்தல் தான் மையக்கருவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கேஜிஎஃப் படத்திலும் தங்கக் கடத்தல் தான் கதை. அன்பறிவு மாஸ்டர்கள் இருப்பதால் இந்த படத்திலும் ஆக்‌ஷன் பிளாக் தெறிக்கும் என்றும் யாரெல்லாம் மல்டி ஸ்டாரர்கள் இந்த படத்தில் இணைந்து படத்தின் வெயிட்டை அதிகரிக்கப் போகின்றனர் என்பதை வெயிட் பண்ணி பார்க்கலாம்.

Thalaivar 171 looks like Karthi s flop movie Japan trolledy by Vijay fans

லியோவுக்கு பதிலடி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் நடித்து வெளியான லியோ படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியதாக கூறப்பட்ட நிலையில், அந்த படம் ஃபிளாப் படம் என ரஜினிகாந்த் ரசிகர்கள் தொடர்ந்து ட்ரோல் செய்து வந்தனர். மேலும், விஜய்யின் அரசியலையும் ரஜினி ரசிகர்கள் கலாய்த்து வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் தலைவர் 171 படத்தை ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜும் இனிமேல் விஜய் படம் பண்ண முடியாது என்கிற நிலையில், லியோ படத்தால் எந்தவொரு சந்தோஷமான விஷயத்தையும் சோஷியல் மீடியாவில் பார்க்கல என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X