Rajinikanth: தலைவர் 171 படத்தின் கதையில் மாற்றமா.. ரஜினிக்கு டீ-ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்த திட்டம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் பிப்ரவரி 9ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது லால் சலாம் படம். இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். முன்னதாக 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ள ஐஸ்வர்யா ரஜினிக்கு இது மூன்றாவது படம். முன்னதாக படத்தின் பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ள நிலையில், சில தினங்களில் படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் லீட் கேரக்டரில் நடித்துள்ளார் விஷ்ணு விஷால். தன்னுடைய படங்களின் ரிலீசின்போது எப்போதுமே தனக்கு ஒரு பதற்றம் இருக்கும் என்றும் ஆனால் இந்தப் படத்தில் அந்த பதற்றம் இல்லாமல் தான் படத்தை ரஜினி ரசிகனாக, ரசிகர்களுடன் இணைந்து பார்க்க விரும்புவதாக அவர் தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். ஒரே படத்தில் தனக்கு எல்லாமும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் கேமியோ கேரக்டரில் நடித்துள்ள படம் லால் சலாம். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ள இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் அவர் நடித்துள்ளார். படம் வரும் 9ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் கடந்த வாரத்தில் படத்தின் இசை வெளியீடும் சிறப்பான வகையில் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினி, தான் பேசிய காக்கா -கழுகு கதை திரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். விஜய் தான் பார்த்து வளர்ந்த பிள்ளை என்றும் கூறினார்.
லால் சலாம் படம்: லால் சலாம் படம் ரிலீசாக இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த கிளிம்ப்ஸ் வீடியோக்களை தயாரிப்பு தரப்பான லைகா வெளியிட்டு வருகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டி கொடுத்துள்ள நடிகர் விஷ்ணு விஷால், இந்தப் படம் தனக்கு பதற்றத்தை கொடுக்கவில்லை என்றும் மாறாக ரசிகர்களுடன் இணைந்து ரஜினி ரசிகனாக படத்தை திரையரங்கில் பார்க்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

ஏப்ரலில் துவங்கும் தலைவர் 171 படம்: தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளதாக முன்னதாக லோகேஷ் கனகராஜ் தனது பேட்டியில் கூறியுள்ளார். தற்போ து படத்தின் ஸ்டோரி டிஸ்கஷனில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளார். மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்படவுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது.,
ரஜினிக்கு டீ-ஏஜிங் தொழில்நுட்பம்: இந்நிலையில் தற்போது படத்தின் கதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாதவகையில் வித்தியாசமான முறையில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் தலைவர் 171 படம் இருக்கும் என்று முன்னதாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய பேட்டியில் கூறியிருந்தார். லோகேஷ் கனகராஜ் படங்களில் வழக்கமாக இருக்கும் போதைப்பொருள் குறித்த கதைக்களமாக இல்லாமல் படம் வித்தியாசமான முறையில் இருக்கும் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தை இளமையாக காட்டும்வகையில் டீ-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











