Thalaivar 171: சிவகார்த்திகேயன் வரிசையில் ‘சலார்’ பிரபலம்... தலைவர் 171ல் இணையும் மாஸ் காம்போ!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார்.

தலைவர் 171ல் இணையும் சலார் பிரபலம்
ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. நெல்சன் இயக்கிய இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஜெயிலர் வெற்றியால் மீண்டும் ரஜினியுடன் இணைவதாக அறிவித்தது சன் பிக்சர்ஸ். அதன்படி சூப்பர் ஸ்டாரின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளதால், தலைவர் 171 படம் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக அனிருத்தும், அன்பறிவ் மாஸ்டர் ஆக்ஷன் கோரியோகிராபியாகவும் கமிட்டாகியுள்ளனர். அதனை தவிர்த்து தலைவர் 171 டீம் குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
வரும் 12ம் தேதி சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளில் தலைவர் 171 அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதேபோல், சிவகார்த்திகேயன் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
இப்போது இந்த லிஸ்ட்டில் பிருத்விராஜ் கன்ஃபார்ம் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மலையாளத்தில் லீடிங் ஹீரோவாக மாஸ் காட்டி வரும் பிருத்விராஜ், தமிழில் கனா கண்டேன், காவியத் தலைவன், மொழி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது பிரபாஸின் சலார் படத்தில் லீடிங் கேரக்டரில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடந்து தலைவர் 171 படத்திலும் பிருத்விராஜ் கமிட்டாகியுள்ளாராம். அதேபோல் மம்முட்டியும் இந்தப் படத்தில் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் வில்லன் ரேஸில் ராகவா லாரன்ஸுடன் எஸ்ஜே சூர்யா, ஃபஹத் பாசில், அருண் விஜய் ஆகியோரும் இணைந்துள்ளனர். இவர்களில் லோகேஷ் கனகராஜ் யாரை செலக்ட் செய்யப் போகிறார் எனத் தெரியவில்லை. ஆனாலும் இதுவரை தலைவர் 171 படத்தின் அடுத்தக்கட்ட அபிஸியல் அப்டேட்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











