Thalaivar 171: ரஜினிக்கு வில்லனாக அந்த நடிகரா..? லோகேஷின் தலைவர் 171 காமெடி படமா ஆகிடாதுல!!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார்.
இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை லோகேஷ் தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக யார் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தலைவர் 171 வில்லன் இவரா?
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். ஜெயிலர் வெற்றியால் உற்சாகமான சன் பிக்சர்ஸ், மீண்டும் ரஜினியுடன் இணைவதாக அறிவித்தது. அதன்படி ரஜினியின் 171வது படமாக உருவாகும் அதன் இயக்குநராக லோகேஷ் கனகராஜ் கமிட்டானார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி - லோகேஷ் கூட்டணி முதன்முறையாக இணைவதால், தலைவர் 171 படம் மீது ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். சன் பிக்சர் தயாரிப்பில் ரஜினி, லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் அனிருத், அன்பறிவ் மாஸ்டர்ஸ் இருவரும் இப்படத்தில் இணைகின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய்யின் லியோ திரப்படம் கடந்த மாதம் வெளியானது. இப்படத்தின் ப்ரொமோஷன் பேட்டிகளில் தலைவர் 171 பற்றியும் அடிக்கடி அப்டேட் கொடுத்து வந்தார் லோகேஷ். அதன்படி தலைவர் 171 LCU படமாக உருவாகவில்லை எனவும், இது ரஜினிக்கு தனியாக எழுதப்பட்ட கதை என்றும் லோகேஷ் கூறியிருந்தார். இந்நிலையில், லியோ வெற்றிவிழா கொண்டாட்டம் முடிந்ததும் தலைவர் 171 ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை தொடங்கிவிட்டாராம் லோகேஷ் கனகராஜ்.
முதல் வேலையாக ரஜினிக்கு வில்லனை செலக்ட் செய்ய முடிவெடுத்துள்ளாராம். அதன்படி தலைவர் 171 படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லன் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி ராகவா லாரன்ஸிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில், சந்தானம் என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இதில் முதலில் நடிக்கவிருந்தது ராகவா லாரன்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ், கடைசியாக சந்திமுகி 2 படத்தில் நடித்திருந்தார். இது ரஜினியின் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக வெளியானது. ஆனால், எதிர்பார்த்த வரவேற்பு இல்லாமல் நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. அதுமட்டும் இல்லாமல் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் ஆகியோரின் நடிப்பும் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது.
இந்நிலையில் தலைவர் 171-ல் ராகவா லாரன்ஸை வில்லனாக நடிக்க வைத்தால், காமெடி படமாக இருக்கும் என நெட்டிசன்கள் இப்போதே ட்ரோல் செய்யத் தொடங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











