Thalaivar 171: “ராவான கேங்ஸ்டர் லுக்... ரஜினிக்கு டஃப் கொடுக்கும் லோகேஷ்..” தலைவர் 171 வைப் லோடிங்!

சென்னை: ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார்.

இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் மும்பையில் நடைபெறவுள்ளதாம்.

இதனிடையே ரஜினியின் தலைவர் 171 படம் பற்றிய எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 Thalaivar 171: Rajini and Lokesh Kanagaraj in Thalaivar 171 Fanmade poster is trending

இந்நிலையில், தலைவர் 171 படத்திற்காக ராவான கேங்ஸ்டர் லுக்கில் ரஜினி இருக்கும் போஸ்டர் வைரலாகி வருகிறது.

ராவான கேங்ஸ்டர் லுக்கில் ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் வெற்றியால் செம்ம எனர்ஜியாக கம்பேக் கொடுத்துள்ள ரஜினி நடிப்பில், லால் சலாம், தலைவர் 170, தலைவர் 171 படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதில் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம், 2024 பொங்கலுக்கு வெளியாகிறது.

அதன் தொடர்ச்சியாக தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் தற்போது நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதற்காக மும்பை சென்றிருந்த சூப்பர் ஸ்டார், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். மேலும், அந்த போட்டோவை தனது டிவிட்டரிலும் ஷேர் செய்திருந்தார். ரஜினியின் இந்த டிவிட்டர் பதிவு ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இதனிடையே, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் தலைவர் 171 படம் பற்றிய எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விஜய்யின் லியோவை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ரஜினியின் தலைவர் 171, லோகேஷின் LCU-ன் கீழ் உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என லோகேஷ் கூறிவிட்டார்.

ஆனாலும், தலைவர் 171ல் ரஜினி கேங்ஸ்டராக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைவரின் ரியலான சம்பவமாக இந்தப் படம் உருவாகும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இதற்கு லீட் கொடுக்கும் வகையில் ஒரு போஸ்டர் வைரலாகி வருகிறது. ராவான கேங்ஸ்டர் லுக்கில் செம்ம மிரட்டலாக மாஸ் காட்டுகிறார் ரஜினி. மேலும், லோகேஷ் ஸ்டைலில் சட்டை பட்டன்களை கழட்டிவிட்டு, பேன்ட் பாக்கெட்டில் கைகளை வைத்தபடி கெத்து காட்டியுள்ளார்.

 Thalaivar 171: Rajini and Lokesh Kanagaraj in Thalaivar 171 Fanmade poster is trending

இன்னொரு சைடில் லோகேஷின் போட்டோவும் இடம்பெற்றுள்ளது. ரஜினி, லோகேஷ் இருவரும் இருக்கும் இந்தப் போஸ்டர், ரசிகர்களால் உருவாக்கப்பட்ட ஃபேன்மேட் போஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைப் பார்த்த ரஜினி ரசிகர்கள், தலைவர் செம்ம மாஸ் என்றும், தலைவர் 171ல் இப்படி கெத்து காட்ட வேண்டும் எனவும் லோகேஷுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X