Thalaivar 171: "லால் சலாம் சூப்பர்... அடுத்து நம்ம லோகேஷ் படம் தான்” ரஜினி சொன்ன தலைவர் 171 அப்டேட்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது வேட்டையன் படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார். முன்னதாக அவர் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் நேற்று வெளியானது. இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தலைவர் 171 படம் குறித்து தரமான அப்டேட் கொடுத்துள்ளார்.

ரஜினி கொடுத்த தலைவர் 171 அப்டேட்
ஜெயிலரை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. தனது மகள் ஐஸ்வர்யாவுக்காக லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்தப் படம் நேற்று வெளியான நிலையில் வேட்டையன் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்த ரஜினி இன்று சென்னை திரும்பினார். அப்போது அவர் விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.

 Thalaivar 171: Rajini gave the Lokesh Kanagarajs Thalaivar 171 update

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ரஜினி, லால் சலாம் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறினார். மேலும், லால் சலாம் படத்தை இயக்கிய தனது மகள் ஐஸ்வர்யா, தயாரித்த லைகா நிறுவனம் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ரஜினியிடம் வேட்டையன் படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினி, வேட்டையன் 80% முடிந்துவிட்டதாகக் கூறினார்.

மேலும், வேட்டையன் ரிலீஸ் தேதி பற்றிய கேள்விக்கு, அது இன்னும் முடிவாகவில்லை என்றார். அதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட பிளான் குறித்தும் ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு "அடுத்து நம்ம லோகேஷ் கனகராஜ் படம் தான்... சீக்கிரமே தலைவர் 171 ஷூட்டிங் தொடங்கும்" எனக் கூறினார். மேலும் இது ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் எனவும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

தலைவர் 171 படம் குறித்து ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியே படப்பிடிப்பு குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் சீக்கிரம் தலைவர் 171 ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் வேட்டையன் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரஜினி ரசிகர்களுக்கு அடுத்தடுத்து ட்ரீட் இருப்பது கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

இன்னொரு பக்கம் லால் சலாம் படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என ப்ளூ சட்டை மாறன் உட்பட சில சோஷியல் மீடியா ட்ராக்கர்ஸ் ட்வீட் செய்துள்ளனர். ரஜினியின் ஐடியாலஜி வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டதாகவும் அதனால் தான் லால் சலாம் படத்துக்கு வரவேற்பு இல்லை என்றும் விமர்சனம் செய்துள்ளனர். முன்னதாக லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் எனது அப்பா சங்கி இல்லை என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X