Thalaivar 171: தலைவர் 171 பூஜைக்கு ரெடியான ரஜினி... தேடுதல் வேட்டையை தொடங்கிய லோகேஷ் கனகராஜ்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். வேட்டையன் ஷூட்டிங் முடிந்ததும் தலைவர் 171ல் ரஜினி இணைவார் என சொல்லப்பட்டது. அதன்படி தற்போது தலைவர் 171 படத்தின் பூஜை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தலைவர் 171 பூஜைக்கு ரெடியான ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோரும் ரஜினியுடன் நடித்து வருகின்றனர். வேட்டையன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

 Thalaivar 171: Rajini Thalaivar 171 formal Pooja Planning on March 23

வேட்டையனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். முதன்முறையாக லோகேஷுடன் ரஜினி இணையும் தலைவர் 171 படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். விஜய், கமல் வரிசையில் தற்போது ரஜினியுடனும் லோகேஷ் இணைந்துள்ளதால், தலைவர் 171 படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே போகிறது.

தலைவர் 171 LCU ஜானரில் இருக்காது எனக் கூறிவிட்ட லோகேஷ், ரஜினிக்காக தரமான ஸ்க்ரிப்ட் ஒன்றை ரெடி செய்து வருகிறாராம். அதேபோல், இது தனது வழக்கமான போதைப் பொருட்கள் பின்னணி கொண்ட படமாக இருக்காது எனவும் லோகேஷ் கூறியிருந்தார். இதனையடுத்து ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளில் பிஸியாக இருந்த லோகேஷ் இப்போது படத்தின் பூஜைக்கும் தேதி குறித்துவிட்டாராம்.

அதன்படி, தலைவர் 171 பூஜை மார்ச் 23ம் தேதி நடைபெறும் என சொல்லப்படுகிறது. இதற்கு ரஜினியும் க்ரீன் சிக்னல் கொடுத்துவிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்ற ஏற்பாடுகளை தொடங்கிவிட்டது. அதேநேரம் கதையை எழுதி முடித்துவிட்ட லோகேஷ், தற்போது லொகேஷன் பார்க்க பல பகுதிகளில் ரவுண்டு அடித்து வருகிறாராம். சென்னை, மும்பை உட்பட மேலும் பல பகுதிகளில் தலைவர் 171 படப்பிடிப்பை நடத்த லோகேஷ் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தலைவர் 171 முழுவதையும் ஐமேக்ஸ் கேமராவில் ஷூட் செய்ய பிளான் செய்துள்ள லோகேஷ், படத்தை 3டி தொழில்நுட்பத்தில் ரிலீஸ் செய்யவும் பட்ஜெட் போட்டுவிட்டாராம். ரஜினி கேரியரில் தரமான ஆக்‌ஷன் மூவியாக உருவாகவுள்ள தலைவர் 171, கண்டிப்பாக ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X