Thalaivar 171: தலைவர் 171 அலப்பறை ஸ்டார்ட்டிங்... 'Code Red' கேப்ஷனுடன் தெறிக்கும் ரஜினியின் போஸ்டர்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் லைன்அப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் காத்திருக்கின்றன.
லால் சலாம் படத்தில் நடித்து முடித்துவிட்ட ரஜினி, அடுத்து தலைவர் 170 படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார்.
இதனிடையே யாரும் எதிர்பாராதவிதமாக தலைவர் 171 படத்தின் அபிஷியல் அப்டேட் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.
அதன்படி, ரஜினி - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் தலைவர் 171 படத்தின் Code Red போஸ்டர் ஒன்று செம்ம வைரலாகி வருகிறது.

Code Red கேப்ஷனுடன் தெறிக்கும் தலைவர் 171 போஸ்டர்: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த மாதம் வெளியான ஜெயிலர், தாறுமாறான ஹிட் கொடுத்துள்ளது. நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்த வெற்றியை சிறப்பாக கொண்டாடிய சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன், ரஜினியின் தலைவர் 171 படத்தையும் தயாரிக்கவுள்ளதாக அபிஸியலாக அறிவித்துவிட்டார்.
அதன்படி, தலைவர் 171 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தில், முதன்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைகிறது. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து கோலிவுட்டையே அதிர வைத்த லோகேஷ், அடுத்து லியோ படத்தின் மூலம் மெகா சிக்ஸர் அடிக்க காத்துக்கொண்டிருக்கிறார். அதேவேகத்தில் தற்போது சூப்பர் ஸ்டாரின் தலைவர் 171 படத்தையும் இயக்கவுள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது லியோ போஸ்ட் புரொடக்ஷன், ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் லோகேஷ், விரைவில் தலைவர் 171 ப்ரீ புரொடக்ஷனில் கவனம் செலுத்தவுள்ளாராம். மேலும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு பிப்ரவரியில் தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், ரஜினியின் தலைவர் 171 திரைப்படமும், லோகேஷ் கனகராஜ்ஜின் LCU கான்செப்ட்டில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை என்றாலும், ரசிகர்கள் தங்கள் அலப்பறையை தொடங்கிவிட்டனர். விக்ரம் படத்தின் போஸ்டரில் 'Code Red' என்ற டேக் லைனுடன் ரசிகர்களுக்கு லீட் கொடுத்திருந்தார் லோகேஷ். இப்போது தலைவர் 171 திரைப்படமும் LCU கான்செப்ட்டில் உருவானால், அதிலும் 'Code Red' இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை குறிப்பிட்டு ரஜினியின் தலைவர் 171 போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. வின்டேஜ் ஸ்டைல் பேக் ட்ராப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினி கால் மேல் கால் போட்டு கெத்தாக அமர்ந்திருக்க, அதன் கீழே 'Code Red' என குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாக தலைவரின் லுக் & மேனரிசம் ரியல் கேங்கஸ்டர்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது. இந்த போஸ்டர் ரஜினி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அதேநேரம் இந்த தலைவர் 171 போஸ்டர் படக்குழு தரப்பில் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ரசிகர்களால் உருவாக்கப்பட்ட ஃபேன்மேட் போஸ்டரான இது, ரஜினியே பார்த்தால் அசந்துவிடும் அளவிற்கு கிரியேட் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தலைவர் 171 படத்துக்கும் டைட்டில் டீசர் வெளியாகவுள்ளதாம். இந்த டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பையும் சத்தமே இல்லாமல் சைலண்டாக முடித்துவிட்டாராம் லோகேஷ். அடுத்தாண்டு பொங்கல் தினத்தில் தலைவர் 171 டைட்டில் டீசர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











