Thalaivar 171: தலைவர் 171 ரஜினி கெட்டப் இதுதானா..? ”சாரே கொல மாஸ்..” ஆயிரம் லியோவுக்கு சமம்!!

சென்னை: ஜெயிலர் திரைப்படம் மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார். ஜெயிலரை தொடர்ந்து ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் விரைவில் வெளியாகவுள்ளது.

இன்னொரு பக்கம் தசெ ஞானவேல், லோகேஷ் கனகராஜ் ஆகியோரது இயக்கத்திலும் நடிக்கவுள்ளார். இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் ரஜினியின் கெட்டப் பற்றிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

 Thalaivar 171: Rajinis Thalaivar 171 fan-made poster is trending now

தலைவர் 171 சூப்பர் ஸ்டார் கெட்டப் : அண்ணாத்த படத்தின் தோல்வியால் துவண்டிருந்த சூப்பர் ஸ்டாருக்கு, ஜெயிலர் செம்ம மாஸ் கம்பேக் கொடுத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய ஜெயிலர், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து மாஸ் காட்டியது. இதனால், மீண்டும் டாப் கியரில் தனது அடுத்த பட வேலைகளில் பிஸியாகிவிட்டார் தலைவர். இதனிடையே ஏற்கனவே ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம், ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது.

இந்த வரிசையில் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார். லைகா தயாரிப்பில் தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தின் அபிஸியல் அப்டேட்ஸ் இன்று முதல் வெளியாகிறது. தலைவர் 170 படத்தை விடவும், தலைவர் 171 மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக காணப்படுகிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது தான் இதற்கான காரணமாகும். அதேபோல் தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினி, லோகேஷ் கனகராஜ், அனிருத், சன் பிக்சர்ஸ் என மெகா கூட்டணியில் உருவாகிறது தலைவர் 171. ஜெயிலர் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் களைகட்டிக் கொண்டிருந்தபோதே தலைவர் 171 அபிஸியல் அப்டேட் வெளியானது. லியோ வெளியானதும் தலைவர் 171 ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளை தொடங்க லோகேஷ் முடிவு செய்துள்ளாராம். அதன்பின்னர் அடுத்தாண்டு பிப்ரவரியில் தலைவர் 171 ஷூட்டிங் தொடங்கும் எனத் தெரிகிறது.

கைதியில் கார்த்தி, மாஸ்டர், லியோ படங்களில் விஜய், விக்ரம் படத்தில் கமல்ஹாசன் ஆகியோரை ஹேர்ஸ்டைல், லுக் போன்றவற்றில் செம்மையாக குரூம் செய்திருந்தார் லோகேஷ். அதேபோல், தலைவர் 171 படத்தில் சூப்பர் ஸ்டார் கெட்டப்பும் செம்ம வெரைட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நியூ லுக்கில் ரஜினியின் போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.

2.O படத்தில் சிட்டி கெட்டப்பில் வந்த ரஜினியை, இன்னும் கொஞ்சம் Rugged லுக்கில் மாற்றினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது அந்த போஸ்டர். செம்ம ஸ்டைலாக கூலர்ஸ் போட்டு, நிறைய துப்பாக்கிகளுக்கு நடுவே அமர்ந்திருக்கிறார் ரஜினி. தெறிமாஸ்ஸாக உள்ள இந்த லுக் தான் தலைவர் 171ல் ரஜினியின் கெட்டப்பாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அப்படி அவர்களால் கிரியேட் செய்யப்பட்ட இந்த ஃபேன்மேட் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X