Thalaivar 171: “தலைவர் 171 LCU படம் இல்லை..” ஆனால், ரஜினியுடன் இணையும் ஆக்ஷன் கிங் அர்ஜுன்..?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 171 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் படம் LCU கான்செப்ட்டில் உருவாகவில்லை என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
தலைவர் 171 LCU படம் இல்லை
ஜெயிலர் மூலம் சூப்பராக கம்பேக் கொடுத்துள்ளார் தலைவர் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய இந்தப் படம் 600 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனையடுத்து ஜெயிலர் வெற்றியை கொண்டாடும் விதமாக, ரஜினி, நெல்சன், அனிருத் மூவருக்கும் கலாநிதிமாறன் சொகுசு கார் பரிசளித்தார். அதோடு ரஜினியின் தலைவர் 171 படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் அதிரடியாக அப்டேட் கொடுத்தார்.

அதன்படி, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை இயக்கியுள்ள லோகேஷ், தற்போது லியோவையும் முடித்துவிட்டார். விஜய் நடித்துள்ள லியோ, அடுத்த வாரம் 19ம் தேதி ரிலீஸாகிறது. அதன்பின்னர் உடனடியாக தலைவர் 171 ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை தொடங்கவுள்ளார் லோகேஷ்.
மேலும், அடுத்தாண்டு பிப்ரவரியில் தலைவர் 171 படப்பிடிப்பை தொடங்கவும் லோகேஷ் கனகராஜ் பிளான் செய்துள்ளாராம். இந்நிலையில், லியோ ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய லோகேஷ், தலைவர் 171 படம் குறித்தும் அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது தலைவர் 171 ஸ்க்ரிப்ட் எற்கனவே ரெடியாக இருந்தது எனக் கூறியிருந்தார். அடுத்ததாக தலைவர் 171 LCU-ல் இணையுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்துள்ள லோகேஷ், தலைவர் 171 LCU ஜானரில் வராது எனவும், அது ரஜினிக்கான தனி ஸ்டோரி என்றும் கூறி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்நிலையில், தலைவர் 171 படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய்யின் லியோ படத்தில் ஹெரால்ட் தாஸ் கேரக்டரில் நடித்துள்ளார் அர்ஜுன்.
லியோவில் வில்லனாக நடித்துள்ள அர்ஜுனின் கேரக்டர் தரமான சம்பவமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதே சம்பவம் தலைவர் 171 படத்திலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தலைவர் 171 படத்தில் அர்ஜுன் நடிக்கவிருப்பது குறித்து லோகேஷ் கனகராஜ் எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











