Thalaivar 171: தலைவர் 171 டைட்டில் டீசர் ரெடி... அசுர வேகத்தில் லோகேஷ்... எப்போ ரிலீஸ்ன்னு தெரியுமா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
இந்நிலையில், ரஜினியின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அதற்கு முன்னதாகவே தலைவர் 171 டைட்டில் டீசர் வெறித்தனமாக வெளியாகும் என சீக்ரெட் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

தலைவர் 171 டைட்டில் டீசருக்கு ரெடியா?: ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார். நெல்சன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான ஜெயிலர் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. முதல் நாளில் சிறப்பான ஓபனிங் கிடைத்த ஜெயிலர், பாக்ஸ் ஆபிஸிலும் இதுவரை 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்நிலையில் ரஜினியின் 171வது படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதும் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. தற்போது தலைவர் 170 படத்தின் படப்பிடிப்புக்காக ரெடியாகிவிட்டார் ரஜினி. லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை தசெ ஞானவேல் இயக்குகிறார். தலைவர் 170 படத்துக்காக மொத்தமே 50 நாட்கள் தான் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் தலைவர். அதனால், அக்டோபரில் தொடங்கும் தலைவர் 170 படப்பிடிப்பில், ரஜினியின் போர்ஷன் முழுவதும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என சொல்லப்படுகிறது.
அதனால், உடனடியாக தலைவர் 171 படத்தில் நடிக்கவும் ரெடியாகிவிட்டாராம் ரஜினிகாந்த். லோகேஷ் கனகராஜ் வேகமாக படப்பிடிப்பு நடத்தி முடிப்பதில் பலே கில்லாடி. அதனால், பிப்ரவரியில் தலைவர் 171 படப்பிடிப்பை தொடங்கி, 2024 தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்துவிடலாம் என முடிவு செய்துள்ளார்களாம். தற்போது லியோ போஸ்ட் புரொடக்ஷன், ப்ரொமோஷன் வேலைகளில் பிஸியாக காணப்படுகிறார். அதனால், லியோ வெளியானதும் தலைவர் 171 வேலைகள் உடனே தொடங்கிவிடும் என சொல்லப்படுகிறது.
முக்கியமாக தனது படங்களின் ஷூட்டிங் தொடங்கும் முன்பே, டைட்டில் டீசர் வெளியிட்டு மாஸ் காட்டுவார் லோகேஷ். கமலின் விக்ரம், விஜய்யின் லியோ இரண்டு படங்களுக்கும் ஷூட்டிங் தொடங்கும் முன்பே, டைட்டில் டீசர் வெளியானது. தற்போது அதேமாதிரி தலைவர் 171 படத்துக்கும் டைட்டில் டீசர் வெளியாகவுள்ளதாம். அதேநேரம் இந்த டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பையும் சத்தமே இல்லாமல் சைலண்டாக முடித்துவிட்டாராம் லோகேஷ்.
ஜெயிலர் வெளியாகும் முன்பே, ரஜினிக்கு டெஸ்ட் ஷூட் முடித்துவிட்ட லோகேஷ், மூன்றே நாட்களில் அவரை வைத்து டைட்டில் டீசர் படப்பிடிப்பை நடத்திவிட்டாராம். லியோ வெளியானதும் டைட்டில் டீசருக்கான எடிட்டிங் வேலைகளை முடிக்க லோகேஷ் பிளான் செய்துள்ளார். அதன்பின்னர் அடுத்தாண்டு பொங்கல் தினத்தில் தலைவர் 171 டைட்டில் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளாராம்.
தலைவர் 171 படத்தில் கமிட்டான அதே வேகத்தில் டைட்டில் டீசரையும் ஷூட் செய்து ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அவரின் அசுர வேகத்தைப் பார்த்து சூப்பர் ஸ்டாரே மிரண்டுவிட்டாராம். அதேபோல், சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்தும் லோகேஷுக்கு என்ன தேவையென்றாலும் உடனடியாக செய்துகொடுக்க தனி டீம் ஒன்றை அலர்ட் செய்துள்ளார்களாம். இதனால், இப்போதே தலைவர் 171 ஹைப் எகிற ஆரம்பித்துள்ளது.


Click it and Unblock the Notifications











