Thalaivar 171: ட்ராப் ஆகிறதா ரஜினியின் தலைவர் 171... லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு இதுதானா..?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றிப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

இதனிடையே ரஜினியின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால், திடீரென இந்தப் படம் ட்ராப் ஆகிறது என செய்திகள் வெளியான நிலையில், தற்போது புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

 Thalaivar 171: Rajinis Thalaivar 171 to begin shooting in February 2024

ரஜினியின் தலைவர் 171 ட்ராப் ஆகிறதா?: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளது. நெல்சன் இயக்கிய இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் மேல் வசூலித்த ஜெயிலர், அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி ஓடிடி ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜெயிலர் வெற்றியை கொண்டாடி முடித்துவிட்ட ரஜினி, அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில், மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இதனிடையே ரஜினியின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கிட்டத்தட்ட ரஜினி - லோகேஷ் கூட்டணி உறுதியாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுபற்றி சில தகவல்கள் வெளியாகின. அதாவது தலைவர் 171 கதை விவாதத்தின் போது, லியோ படத்திற்காக எழுதிய சீனை லோகேஷ் ரஜினியிடம் கூறியதாகவும், அதனை அப்படியே லோகேஷுக்கு தெரியாமல் ஜெயிலர் படத்தில் ரஜினி பயன்படுத்திவிட்டார் எனவும் செய்திகள் வெளியாகின. இதனால், ரஜினியுடன் இணையலாமா அல்லது வேண்டாமா என லோகேஷ் யோசித்து வருவதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால், இந்த தகவல்கள் அனைத்தும் உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது. மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினி - லோகேஷ் கனகராஜ் இணைவது கன்ஃபார்ம் எனவும் சொல்லப்படுகிறது. அதேபோல், இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். இதற்காக பல கோடி ரூபாய் பட்ஜெட்டை ஒதுக்கிவிட்டதாகவும், அடுத்தாண்டு பிப்ரவரியில் தலைவர் 171 ஷூட்டிங் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைவர் 171 ட்ராப் ஆகும் என செய்திகள் வெளியானதால், ஷூட்டிங் அப்டேட்டை படக்குழுவே கசியவிட்டுள்ளதாம். அதுமட்டும் இல்லாமல் தலைவர் 171 படத்தை அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியிடவும் சன் பிக்சர்ஸ் முடிவு செய்துவிட்டதாம். லோகேஷ் கனகராஜ்ஜும் அதற்குள்ளாக மொத்த படத்தையும் முடித்துவிடுவதற்கு ஓக்கே சொன்னதாக தெரிகிறது. இதனால், தலைவர் 171 பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X