Thalaivar 171: "எது லோகேஷ் திருந்திட்டாரா..” தலைவர் 171ல் அதெல்லாம் கிடையாது... அவரே சொல்லிட்டாரே!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள திரைப்படம் தலைவர் 171. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள தலைவர் 171 ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் கதை குறித்து லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்துள்ளார்.

தலைவர் 171ல் அதெல்லாம் கிடையாது: கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ்ஜுக்கு ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர்கள் உள்ளனர். மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ், அடுத்தடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என ப்ளாக் பஸ்டர் படங்களை இயக்கினார். இதில் கமல்ஹாசன், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி நடித்த விக்ரம், கடந்தாண்டு வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது.

 Thalaivar 171: Rajinis Thalaivar 171 Will Be Drug-Free and Mass Action Film

விக்ரம் திரைப்படம் தான் கமலுக்கு செம்மையான கம்பேக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் லோகேஷ் கூட்டணியில் நாமும் ஒரு படம் கொடுக்க வேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினி முடிவு செய்திருந்தார். இறுதியாக இந்தக் கூட்டணி சன் பிக்சர்ஸ் பேனரில் உருவாகும் தலைவர் 171 படத்தில் இணைந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி, லோகேஷ் கனகராஜ், அனிருத், அன்பறிவ் மாஸ்டர் ஆகியோர் தலைவர் 171ல் இணைந்தது உறுதியாகிவிட்டது.

லோகேஷ் நடிப்பில் ரஜினி நடிக்கும் இந்தப் படம் LCU கான்செப்ட்டில் உருவாகவில்லை என லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கூறிவிட்டார். ஆனால், தரமான ஆக்‌ஷன் ட்ரீட்டாக இருக்கும் என்பது கன்ஃபார்மாகிவிட்டது. தலைவர் 171 படத்துக்காக சோஷியல் மீடியாவில் இருந்து விலகிய லோகேஷ், தற்போது ஸ்க்ரிப்ட், ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார்.

இந்நிலையில், தலைவர் 171 படம் குறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார் லோகேஷ். அப்போது இந்தப் படத்தில் கஞ்சா, போதை பொருட்கள் பின்னணியில் இருக்காது எனக் கூறியுள்ளார். அதேநேரம் படம் முழுக்க ஆக்‌ஷன் தெறிக்கவிடும் என்றும் லோகேஷ் தெரிவித்துள்ளார். லோகேஷின் மாநகரம் முதல் லியோ வரை, அவர் இயக்கியுள்ள 5 படங்களிலும் போதை பொருட்களான கஞ்சா, அபின் போன்றவையும் முக்கியமான பங்கு வகித்துள்ளன.

அதாவது கஞ்சா, போதைப் பொருட்கள் கடத்தும் வில்லன்களை அழிக்க லோகேஷின் ஹீரோ போராடுவார். போதைப் பொருட்கள் இல்லா இளைய சமூகம் உருவாக வேண்டும், அதனால் தான் அதன் பாதிப்புகள் குறித்து படங்கள் எடுப்பதாக லோகேஷ் கூறியிருந்தார். ஆனால், லோகேஷின் இந்த ஸ்டேட்மெண்ட் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. பேருக்கு ட்ரக் ஃப்ரீ சோஷைட்டி என சொல்லிவிட்டு, படம் முழுக்க கஞ்சா, போதைப் பொருட்களுடன் ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன் காட்சிகள் வைப்பது தான் லோகேஷின் வழக்கம்.

இதுதான் லோகேஷ் படங்களின் வெற்றிக்கு காரணம் என விமர்சனங்கள் வந்தன. இதனால் லோகேஷ் கனகராஜ் திருந்திவிட்டாரோ என்னவோ? தலைவர் 171 போதைப் பொருட்கள் பின்னணியில் உருவாகவில்லை என லோகேஷ் ஓபனாக பேசியுள்ளார். ஆனால் ஆக்‌ஷனுக்கு பஞ்சமே இருக்காது எனவும் லோகேஷ் அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் லோகேஷ் சினிமாட்டிக் வரலாற்றில் முதன்முறையாக கஞ்சா, போதைப் பொருட்கள் இல்லாமல் தலைவர் 171 உருவாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தலைவர் 171 கதை என்னவாக இருக்கும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X