Thalaivar 171: ரஜினியின் தலைவர் 171-இல் அந்த ஹீரோவா..? வாய்ப்பே இல்ல ராசா... கை விரித்த லோகேஷ்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தலைவர் 171 உருவாகவுள்ளது. இதில் ரஜினியுடன் நடிக்கவிருக்கும் நடிகர்கள் குறித்து வெளியான தகவலுக்கு லோகேஷ் கனகராஜ் தரப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது.
தலைவர் 171ல் அந்த நடிகரா
சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்ஜுடன் இணைகிறார் ரஜினி. அதன்படி முதன்முறையாக ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் இணையும் தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஏற்கனவே ரஜினி - சன் பிக்சர்ஸ் கூட்டணியில் வெளியான ஜெயிலர் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

தலைவர் 171 படத்தின் இசையமைப்பாளராக அனிருத்தும், அன்பறிவ் மாஸ்டர் ஆக்ஷன் கோரியோகிராபியாகவும் கமிட்டாகியுள்ளனர். அதனை தவிர்த்து தலைவர் 171 டீம் குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. அதேநேரம் தற்போது வரை சிவகார்த்திகேயன் மட்டும் தலைவர் 171ல் நடிப்பது கன்ஃபார்ம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், இந்தப் படத்தில் ரஜினி நெகட்டிவ் ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரே ஷேடில் கேங்ஸ்டராக மிரட்ட வருகிறாராம் ரஜினி. அதேநேரம், ரஜினிக்கு வில்லனாக எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், பிருத்விராஜ், அருண் விஜய் ஆகியோரில் யாரேனும் நடிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் திடீரென தலைவர் 171 படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கவுள்ளதாக சில தகவல்கள் கசிந்தன. இதனால் தலைவர் 171 மீதான எதிர்பார்ப்பு எகிறியது.
விஜய் - ஷாருக்கான் இணையும் படத்திற்காக அட்லீ கதை எழுதி வரும் நிலையில், தலைவர் 171 படத்திலும் பாலிவுட் பாட்ஷா நடிக்கப் போகிறாரா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது உண்மையில்லை என்றும், தலைவர் 171 படத்தில் நடிக்க ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் லோகேஷ் கனகராஜ் தரப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது.
தலைவர் 171 திரைப்படத்தின் ஷூட்டிங் 2024 ஏப்ரல் மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல், இந்தப் படத்தில் ரஜினியுடன் நடிப்பவர்கள் பற்றிய அறிவிப்பு, வேட்டையன் ஷூட்டிங் முடிந்த பின்னர் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். தலைவர் 171 என தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் டைட்டில் 'வேட்டையன்' என நேற்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











