Thalaivar 171: சிவகார்த்திகேயன் கன்ஃபார்ம்... வேற லெவலில் தலைவர் 171... தாறுமாறாக வெளியான அப்டேட்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் பிரமமாண்டமாக உருவாகவுள்ளது. தலைவர் 171 பத்தில் நடிக்க தனக்கு அழைப்பு வரவில்லை என சிவகார்த்திகேயன் கூறியிருந்த நிலையில், தற்போது அவர் கண்டிப்பாக இக்கூட்டணியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேற லெவலில் தலைவர் 171
ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் நடிப்பில் வேகம் காட்டி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்த ரஜினி, அடுத்து வேட்டையன் படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் வேட்டையன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்திற்குள் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.

Thalaivar 171: Sivakarthikeyan To Playing Important Role Positive Character in Thalaivar 171

வேட்டையன் படப்பிடிப்பு முடிந்ததும் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். முதன்முறையாக ரஜினி - லோகேஷ் கூட்டணி இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது. விஜய், கமல்ஹாசனை தொடர்ந்து ரஜினியுடன் இணைகிறார் லோகேஷ். இது லோகேஷ் கனகராஜ்ஜின் 6வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் ஸ்டைலில் பக்கா ஆக்‌ஷன் மூவியாக உருவாகும் தலைவர் 171, LCU ஜானரில் இணையவில்லை என ஏற்கனவே லோகேஷ் அறிவித்துவிட்டார். அதேநேரம், ரஜினிக்கு இந்தப் படத்தில் நெகட்டிவ் ஷேட் கேரக்டர் என்பது மட்டும் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இந்நிலையில், தலைவர் 171 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கலாம் என முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால், அயலான் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், தலைவர் 171ல் நடிக்க தனக்கு அழைப்பு வரவில்லை எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயனுக்கு தலைவர் 171 படத்தில் முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அவர் பாசிட்டிவான கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தலைவர் 171 மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளில் லோகேஷ் கனகராஜ் பிஸியாக உள்ளார். மேலும் தலைவர் 171 படப்பிடிப்பை வரும் ஏப்ரலில் தொடங்கவும் அவர் திட்டமிட்டுள்ளாராம்.

தலைவர் 171 படம் முழுக்க ஐமேக்ஸ் கேமராவில் ஷூட் செய்யப்படவுள்ளதாக லோகேஷ் கூறியிருந்தார். இப்போது இந்தப் படத்தை 3டி தொழில்நுட்பத்தில் ரிலீஸ் செய்யவும் படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதேபோல், உலகம் முழுவதும் பல மொழிகளில் தலைவர் 171 படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர். ரஜினிக்குப் பின்னர் சிவகார்த்திகேயனுக்கு தான் இப்படத்தில் லீடிங் ரோல் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X