Thalaivar 171: ரஜினி - லோகேஷ் கூட்டணி கன்ஃபார்ம்... சன் பிக்சர்ஸ் கொடுத்த பிளாங்க் செக்!
சென்னை: கடந்த சில நாட்களாகவே சூப்பர் ஸ்டார் ரஜினி - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
ரஜினி தனது கடைசி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார்.
முன்னதாக லோகேஷும் சூப்பர் ஸ்டாருக்காக ஒரு கதை எழுதியிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், ரஜினி - லோகேஷ் கூட்டணி உறுதியாக இணையவுள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

உறுதியாகும் தலைவர் 171
தற்போதைக்கு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருப்பது ரஜினி - லோகேஷ் இணையும் தலைவர் 171 திரைப்படம் தான். தனது கடைசிப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் நன்றாக இருக்கும் என ரஜினி விருப்பம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. விக்ரம் படம் இயக்குவதற்கு முன்பாகவே ரஜினிக்காக கதையுடன் காத்திருந்தார் லோகேஷ். இந்நிலையில் தற்போது இக்கூட்டணி உறுதியாகியுள்ளதாம்.
ஜெயிலர் படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார், அடுத்து லால் சலாம், தலைவர் 170 ஆகிய படங்களிலும் நடிக்கவுள்ளார். இதனையடுத்து தான் லோகேஷுடன் தலைவர் 171 படத்தில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. ஆனால், லால் சலாம், தலைவர் 170 படங்களை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. பின்னர் மீண்டும் தலைவர் 171 படத்துக்காக சன் பிக்சர்ஸுடன் ரஜினி இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தலைவர் 171 படத்திற்காக லோகேஷுக்கு 35 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி தருவதாக ரஜினிகாந்த் கூறியிருந்தாராம். ஆனால், இப்போது ப்ளாங் செக்காகவே கொடுத்திடலாம் என சன் டிவியே முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் படத்தின் பஜெட் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என சொல்லிவிட்டார்களாம். இதனால் லோகேஷ் அன்ட் டீம் தலைவர் 171 படத்திற்காக வெறித்தனமான வெயிட்டிங்கில் உள்ளனர்.
அதேநேரம், இந்தப் படமும் லோகேஷ் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் இருக்கும் என்றே தெரிகிறது. விஜய்யின் லியோ படத்தை முடித்துவிட்டு, கார்த்தி நடிக்கவுள்ள கைதி 2 இயக்கவுள்ளார் லோகேஷ். அதன்பின்னரே தலைவர் 171 படத்தின் ஸ்கிரிப்ட்டை LCU கான்செப்ட்டில் இணையும் விதம் எழுதப் போகிறாராம் லோகேஷ். இதனால் இந்தப் படம் செம்ம மாஸ்ஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவர் 171 படத்தை முடித்த பின்னர் விக்ரம் 2, ரோலக்ஸ் ஆகிய படங்களை இயக்க திட்டமிட்டுள்ளாராம் லோகேஷ். இனி தொடர்ச்சியாக அவரது யுனிவர்ஸ்க்குள்ளே படங்களை இயக்கலாம் என லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே விஜய்யின் லியோ படத்திற்காக விஜய் சேதுபதி 3 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். ஆனால், நடிகராக இல்லாமல் அவரது வாய்ஸ் ஓவர் மட்டும் இந்தப் படத்தில் பயன்படுத்த உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











