Thalaivar 171: “தலைவர் 171ல் அவரு வேண்டாம்” லோகேஷுக்கு ரஜினி அட்வைஸ்... சிவகார்த்திகேயனுக்கு கல்தா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். முதன்முறையாக ரஜினி, லோகேஷ் இணையும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் சிவகார்த்திகேயனும் ஒரு லீடிங் ரோலில் நடிப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் ரஜினியின் அட்வைஸ் படி கதையில் மாற்றம் செய்யும் லோகேஷ், சிவகார்த்திகேயனுக்கும் கல்தா கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
தலைவர் 171ல் திடீர் மாற்றம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஜெயிலரை தொடர்ந்து வேட்டையன் படத்தில் சில முன்னணி ஹீரோக்கள் ரஜினியுடன் நடிக்கின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியும் 2கே கிட்ஸ் ரசிகர்களின் மனநிலையை புரிந்துகொண்டு மல்டி ஸ்டார்ஸ் படங்களில் நடித்து வருகிறார். வேட்டையனை தொடர்ந்து லோகேஷுடன் முதன்முறையாக இணைகிறார் ரஜினிகாந்த். அதன்படி தலைவர் 171 என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்தப் படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கோலிவுட் ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார், அன்பறிவ் மாஸ்டர்ஸ் ஆக்ஷன் கோரியோகிராபி செய்கின்றனர்.
இந்நிலையில், தலைவர் 171 LCU ஜானரில் உருவாகவில்லை என லோகேஷ் ஏற்கனவே கூறிவிட்டார். அதேபோல், இந்தப் படத்தின் கதை போதைப் பொருட்களை பின்னணியாக வைத்து எழுதவில்லை என்பதையும் லேகேஷ் கனகராஜ் அறிவித்துவிட்டார். ஆனாலும், படம் செம்ம கிளாஸ்ஸாக ரஜினியின் கேரியரில் தரமான சம்பவமாக இருக்கும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தலைவர் 171 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது. மேலும் அவரது கேரக்டர் பற்றியும் தகவல்கள் வெளியாகியிருந்தன. அதேபோல், சிவகார்த்திகேயன் மட்டுமின்றி இன்னும் சில முன்னணி நடிகர்களுடன் மல்டி ஸ்டார்ஸ் படமாக தலைவர் 171 உருவாகும் என தகவல்கள் தெரிவித்தன. ஆனால் தற்போது திடீரென இதில், மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, தலைவர் 171 மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகவில்லை எனவும், அதனால் சிவகார்த்திகேயன் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது அனைத்துமே ரஜினியின் அட்வைஸ் படி தான் லோகேஷ் செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கதையில் மாற்றங்கள் இருந்தாலும் தலைவர் 171, நிச்சயமாக ரஜினி ப்ளஸ் லோகேஷ் கூட்டணியில் மேஜிக்கலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைவர் 171 படத்தை ஐமேக்ஸ் கேமராவில் ஷூட் செய்ய பிளான் செய்துள்ளார் லோகேஷ். அதேபோல் 3டி தொழில்நுட்பத்திலும் தலைவர் 171 படத்தை ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளதாம். தலைவர் 171 ஷூட்டிங் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கவுள்ளது.


Click it and Unblock the Notifications











