Thalaivar 171: விஜய் ரசிகர்களுக்கு தொடர்ந்து ஆப்பு அடிக்கும் சன் பிக்சர்ஸ்.. வதந்திக்கு வேட்டு!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்துக்கு பிறகு ரஜினியை இயக்க மாட்டார் என்றும் தலைவர் 171 படமே டிராப் என விஜய் ரசிகர்கள் என்கிற போர்வையில் சில விஷமிகள் பரப்பிய வதந்தி தீயாக பரவி வந்த நிலையில், தற்போது அதிரடியாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதற்கு பெரிய ஃபுல் ஸ்டாப் வைத்துள்ளது.

தலைவர் 170 படம் முடியும் தருவாயில் அறிவிக்கப்பட வேண்டிய தலைவர் 171வது படத்தின் அறிவிப்பை அதிரடியாக தற்போது சன் பிக்சர்ஸ் அறிவித்து விட்டது.

Thalaivar 171 update arrived like a style and put full stop to Vijay fans rumours

ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப் போகிறார் என்றும் அனிருத் தான் இசையமைப்பாளர் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு ஹேட்டர்கள் முகத்தில் கரியை பூசியுள்ளது சன் பிக்சர்ஸ்.

ஓவர் நெகட்டிவிட்டி: நெகட்டிவிட்டியை பரப்ப வேண்டாம் என தளபதி விஜய் எத்தனை முறை சொன்னாலும், சமூக வலைதளங்களில் ஆபாச ட்விட்டர் சண்டை போடுவதில் தொடங்கி மற்ற நடிகர்கள் குறித்து மோசமான பதிவுகளை போடுவது என அதிகமான நெகட்டிவிட்டிகளை விஜய் ரசிகர்கள் பரப்பி வருவதாக கடுமையான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

Thalaivar 171 update arrived like a style and put full stop to Vijay fans rumours

ஜெயிலர் படத்தின் வசூலை ஜீரணிக்க முடியாத நிலையில், லியோ படத்தின் இடைவேளை ஸ்னைபர் காட்சியையே லோகேஷ் கனகராஜிடம் இருந்து நெல்சன் திருடி வைத்து விட்டார் என வதந்தி பரப்பி வந்தனர் என ரஜினி ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

லோகேஷ் - ரஜினி கூட்டணி முறிவு என உருட்டு: அதுமட்டுமின்றி உச்சகட்டமாக லியோ படத்திற்கு பிறகு ரஜினியை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த சூழலில் ரஜினிகாந்த் உடன் லோகேஷ் கனகராஜ் சண்டை போட்டு விட்டார் என்றும் தலைவர் 171 படமே டிராப் என நேற்று விஜய் ரசிகர்கள் பலர் அந்த பொய்யான தகவலை பரப்பி வந்தனர்.

Thalaivar 171 update arrived like a style and put full stop to Vijay fans rumours

ஆப்பு அடித்த சன் பிக்சர்ஸ்: தொடர்ந்து விஜய் ரசிகர்களுக்கு சன் பிக்சர்ஸ் ஆப்பு அடித்து வரும் நிலையில், தற்போது அதிரடியாக தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்றும் அனிருத் இசையமைப்பார் என்றும் அன்பறிவு மாஸ்டர் தான் ஸ்டன்ட் என்றும் அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பு வெளியான நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் மீண்டும் விஜய் ரசிகர்களை பங்கமாக கலாய்த்து வெறுப்பேற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X