Thalaivar 171: சிவகார்த்திகேயனுக்கு நோ சான்ஸ்... ‘அந்த ஹீரோ’ ஓக்கே தான்... தலைவர் 171ல் ரஜினி சாய்ஸ்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது வேட்டையன் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது அவருக்குப் பதிலாக இன்னொரு வெரைட்டியான ஹீரோவை ரஜினி செலக்ட் செய்துள்ளாராம்.
தலைவர் 171ல் இணையும் மாஸ் ஹீரோ
ஜெயிலர் கொடுத்த சூப்பரான கம்பேக் காரணமாக ரஜினியின் அடுத்தடுத்த படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதில் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் விரைவில் வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து தசெ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார். இதனையடுத்து ரஜினி கமிட்டாகியுள்ள திரைப்படம் தலைவர் 171.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள தலைவர் 171 படத்தை, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படம் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினி, லோகேஷ் கனகராஜ் கூட்டணி முதன்முறையாக இணையவுள்ளது. இதனால் தலைவர் 171 ஷூட்டிங் தொடங்கும் முன்பே, இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தலைவர் 171ல் சிவகார்த்திகேயன் நடிக்கலாம் என செய்திகள் வெளியாகின.
ஆனால், அயலான் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், தலைவர் 171ல் நடிக்க தனக்கு அழைப்பு வரவில்லை எனக் கூறியிருந்தார். இதனால் தலைவர் 171 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அதேநேரம் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அதாவது சிவகார்த்திகேயனுக்கு தான் நோ என்றும், விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு கொடுக்கலாம் எனவும் ரஜினி சிக்னல் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே ரஜினியின் பேட்ட படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார் விஜய் சேதுபதி. அதேபோல் மாஸ்டர், விக்ரம் படங்கள் மூலம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடித்துள்ளார். இதனால் தலைவர் 171ல் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். முன்னதாக கோலிவுட்டில் இருந்து இளம் ஹீரோக்கள் யாரையும் தன்னுடன் நடிக்க வைக்க ரஜினி விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகின.
அதனால் தான் தலைவர் 170 படமான வேட்டையனில் கூட ஃபஹத் பாசில், ராணா என மற்ற மொழி ஹீரோக்களை களமிறக்கியுள்ளார் தசெ ஞானவேல். தமிழில் உள்ள இளம் ஹீரோக்களுடன் இணைந்து நடித்தால் தனது இமேஜ் டேமேஜ் ஆகிவிடும் என கலக்கத்தில் உள்ளாராம் ரஜினி. அதனால் தான் தலைவர் 171ல் சிவகார்த்திகேயன் நடிக்க ரஜினிகாந்த் சம்மதம் தெரிவிக்கவில்லையாம்.
இந்நிலையில், தலைவர் 171 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது விரைவில் கன்ஃபார்ம் ஆகிவிடும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக இந்தப் படம் லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் உருவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











