Thalaivar 171: மீண்டும் ரஜினியுடன் மோதும் விஜய் சேதுபதி... LCU-இல் இணையும் தலைவர் 171..?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது.
இதன் தொடர்ச்சியாக ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ரஜினி தலைவர் 170, தலைவர் 171 என அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார்.
இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் ரஜினியுடன் மோதும் விஜய் சேதுபதி: பேட்ட, தர்பார், அண்ணாத்த படங்களால் ஆட்டம் கண்டிருந்த ரஜினியின் மார்க்கெட், ஜெயிலர் ரிலீஸுக்குப் பின்னர் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஜெயிலர் படத்தின் வெற்றியால் அடுத்தடுத்து இரண்டு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினி. இதனிடையே தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோர் ரோலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் 170வது படத்தை 'ஜெய்பீம்' புகழ் தசெ ஞானவேல் இயக்குகிறார். இந்தப் படத்தின் டைட்டில் 'வேட்டையன்' எனவும், விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. செப்டம்பர் முதல் அக்டோபர் வரை தலைவர் 170 படப்பிடிப்பில் கலந்துகொள்ள ரஜினி, மொத்தமே 50 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் உடனடியாக தலைவர் 171ல் இணையவுள்ளார் சூப்பர் ஸ்டார்.
உலகநாயகன் கமல்ஹாசனுக்கு வெறித்தனமான கம்பேக் கொடுத்த திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம், பாக்ஸ் ஆபிஸில் தரமான சம்பவம் செய்தது. இதனால் லோகேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ரஜினியே கூறியதாக சொல்லப்படுகிறது. தற்போது விஜய்யின் லியோ படத்தை இயக்கியுள்ள லோகேஷ் அடுத்து கார்த்தியை வைத்து கைதி 2ம் பாகம் இயக்கவிருந்தார்.
ஆனால், அதற்கு நடுவில் ரஜினியின் தலைவர் 171 படத்தில் கமிட்டாகிவிட்டார் என செய்திகள் வெளியாகின. இதுகுறித்து தயாரிப்பு தரப்பில் இருந்து அப்டேட் வரும் என லோகேஷ் கனகராஜ்ஜும் கூறியிருந்தார். சூப்பர் ஸ்டார் படம் என்பதால், இது லோகேஷின் யுனிவர்ஸில் இடம் பிடிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்போடு இருந்தனர். தற்போது அதனை கன்ஃபார்ம் செய்துள்ளது ஒரு முக்கியமான அப்டேட்.

அதாவது தலைவர் 171 படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. லோகேஷின் மாஸ்டர், விக்ரம் என இரண்டு படங்களிலும் வில்லன் கேரக்டரில் நடித்து மிரட்டினார் விஜய் சேதுபதி. விக்ரம் படத்தில் சந்தானம் கேரக்டரில் வெரைட்டியாக வில்லத்தனம் செய்திருந்தார் விஜய் சேதுபதி. இந்த கேரக்டர் தலைவர் 171 படத்திலும் இருக்கும் என சொல்லப்படுகிறது.
பேட்ட படத்திற்குப் பிறகு ரஜினியுடன் விஜய் சேதுபதி இதில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி - விஜய் சேதுபதி காம்போ மீண்டும் இணையவிருப்பதால் ரசிகர்களிடம் இன்னும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











