Thalaivar 171: தலைவர் 171 அப்டேட் அவசரமாக வெளியாக இதுதான் காரணமா..? சன் பிக்சர்ஸின் ஸ்மார்ட் மூவ்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த மாதம் ரிலீஸான ஜெயிலர், இண்டஸ்ட்ரி ஹிட் படமாக அமைந்தது. இதனையடுத்து ஜெயிலர் படத்தின் சக்சஸை, சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் கிராண்டாக கொண்டாடினார்.
அதேவேகத்தில் ரஜினியின் தலைவர் 171 படத்தின் அப்டேட்டையும் வெளியிட்டு மாஸ் காட்டியிருந்தார். ரஜினி - லோகேஷ் இணையும் தலைவர் 171 அப்டேட் இவ்வளவு அவசரமாக வெளியாக காரணம் என்னவென்று தற்போது தெரியவந்துள்ளது.

தலைவர் 171 அப்டேட் இதுதான் காரணமா? : கடந்த மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வெறித்தனமான கம்பேக் கொடுத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், சிவ ராஜ்குமார், மோகன்லால், தமன்னா, விநாயகன், யோகி பாபு உள்ளிட்ட பலர், இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
கலவையான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது ஜெயிலர். இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு BMW X7 காரையும், நெல்சன், அனிருத் ஆகியோருக்கு போர்சே காரையும் பரிசளித்தார் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன். அதுமட்டும் இல்லாமல், ஜெயிலர் படக்குழுவினர் அனைவருக்கும் தங்க நாணயம் கொடுத்து, மெகா விருந்தும் கொடுத்து அசத்தினார்.
ஜெயிலர் வெற்றி கொண்டாட்டங்கள் நடந்துகொண்டிருந்த போதே, அதைவிட சூடான அப்டேட்டும் வெளியானது. அதாவது ரஜினியின் 171வது படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும், அதனை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் சன் பிக்சர்ஸ் அபிஸியலாக அறிவித்தது. அதன்படி, தலைவர் 171 அப்டேட் கடந்த வாரம் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினி, லோகேஷ் கனகராஜ், அனிருத், சன் பிக்சர்ஸ் என மெகா கூட்டணியில் உருவாகிறது தலைவர் 171.
ரஜினியின் லால் சலாம் படம் இன்னும் வெளியாகவில்லை. அதேபோல், அவரது தலைவர் 170 படத்தின் ஷூட்டிங்கும் இதுவரை தொடங்கவில்லை. ஆனால், அதற்குள்ளாக தலைவர் 171 பட அப்டேட் வெளியானது, ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. அதேபோல், ரஜினியும் முதலில் தலைவர் 170 முடிந்த பின்னர் தான், தலைவர் 171 எனக் கூறிவிட்டார். சன் பிக்சர்ஸ் தான் இந்த அப்டேட்டை விரைவில் வெளியிட முடிவு செய்ததாம்.
அதாவது ஜெயிலர் வெற்றிக்குப் பின்னர், சன் குழுமத்திற்கு ஷேர் மார்க்கெட்டில் நல்ல லாபம் கிடைத்துள்ளது. அவர்களது பங்குகளை வாங்கிய வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியில் இருந்துள்ளனர். அவர்களை தக்க வைத்துக்கொள்வதற்காகவே, தலைவர் 171 அப்டேட்டை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது சன் பிக்சர்ஸ். இதனால், ஷேர் மார்க்கெட்டில் சன் பிக்சர்ஸின் வேல்யூ இன்னும் அதிகரிக்கும் என்பதே இதன் நோக்கமாம். இந்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











