Thalaivar 172: ரஜினியை சந்தித்த பிரபல இயக்குநர்... தலைவர் 172 கூட்டணி இதுதானா..? மரண மாஸ் அப்டேட்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியை பிரபல இயக்குநர் தற்போது சந்தித்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

தலைவரை சந்தித்த பிரபல இயக்குநர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போதும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக மாஸ் காட்டி வருகிறார். கடந்தாண்டு வெளியான ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம், இந்த மாதம் வெளியாகவுள்ளது. பொங்கலுக்கு ரிலீஸாகும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது ஜனவரி 26ம் தேதி லால் சலாம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Thalaivar 172: Director Lingusamy met Superstar Rajinikanth for Thalaivar 172

இந்நிலையில், தனது 170வது படமான வேட்டையனில் பிஸியாக நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார். லைகா தயாரிப்பில் தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தில் ரிட்டையர்டு போலீஸ் ஆபிஸர் கேரக்டரில் ரஜினி நடிப்பதாக சொல்லப்படுகிறது. ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷலாக வேட்டையன் டைட்டிலுடன் மினி டீசரும் வெளியாகி மாஸ் காட்டியிருந்தது. இந்தப் படம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேட்டையன் படப்பிடிப்பு முடிந்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார் சூப்பர் ஸ்டார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் செம்ம ஆக்‌ஷன் ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதற்காக தலைவர் 171 ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்குநர் லிங்குசாமி சந்தித்துள்ளார். ரஜினியுடன் லிங்குசாமி இருக்கும் போட்டோ டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

ஆனந்தம் மூலம் இயக்குநராக அறிமுகமான லிங்குசாமி, தொடர்ந்து ரன், சண்டக்கோழி, பீமா, பையா என சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். ஆனாலும் கடைசியாக அவர் இயக்கிய வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி 2, தி வாரியர் படங்கள் எதுவுமே எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. விரைவில் பையா 2ம் பாகத்தை இயக்க லிங்குசாமி முடிவு செய்துள்ளதாக சொல்லப்பட்டது. இந்த சூழலில் அவர் ரஜினியை சந்தித்துள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன்மூலம் ரஜினியின் தலைவர் 172 படத்தை லிங்குசாமி இயக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தலைவர் 171ல் கமிட்டாகியுள்ள லோகேஷ் கனகராஜ், இதுதான் ரஜினியின் கடைசி படம் இல்லையென்றும், ரஜினி சாரை அடுத்து இயக்கவிருப்பது யார் எனத் தெரியும் என்றும் கூறியிருந்தார். அதன்படி தலைவர் 172 இயக்குநர் லிங்குசாமியாக இருக்கலாம் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இதுபற்றி ரஜினி தரப்போ அல்லது லிங்குசாமியோ எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X