தலைவர் 173 இயக்குநர் இவர்தான்.. ரஜினியை இயக்கப்போகும் சூப்பர் டைரக்டர்.. காம்போ பட்டையை கிளப்புமா?

சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருக்கும் தலைவர் 173 படத்தை சுந்தர்.சி இயக்குவதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேறிவிட்டார். சுந்தர் விலகியதை அடுத்து இந்தப் படத்தை யார் இயக்குவார் என்ற கேள்விதான் அனைவரிடமும் இருந்தது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என ராஜ்கமல் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

கூலி படத்தின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் 2வில் நடித்துவருகிறார் ரஜினி. இப்படத்தை எப்படியாவது ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என மொத்த படக்குழுவும் உழைத்துவருகிறது. இப்படத்தை முடித்துவிட்டு சினிமாவிலிருந்து சூப்பர் ஸ்டார் விலகப்போகிறார் என்றெல்லாம் கொளுத்தி போட்டார்கள். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்யும் விதமாக; கமல்ஹாசன் தயாரிப்பில் தலைவர் 173 படத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என்ற அறிவிப்பு வெளியானது.

உச்சக்கட்ட உற்சாகம்: அதோடு படத்தை சுந்தர்.சி இயக்குவார் என்றும் அறிவிப்பு வெளியானது. ரஜினியும், கமலும் சேர்ந்து நடிக்காவிட்டாலும்; கமல் தயாரிப்பிலாவது ரஜினி நடிக்கிறாரே என உற்சாகமடைந்தார்கள் தலைவரின் ரசிகர்கள். அதுமட்டுமின்றி சுந்தர்.சி இயக்கம் என்பதால் இது கம்ப்ளீட்டாக ஃபேமிலி ஆடியன்ஸுக்கான படமாக உருவாகும்; எனவே தலைவர் 173 கன்ஃபார்ம் ஹிட்டுதான் என அடித்து சொல்ல ஆரம்பித்தார்கள்.

Thalaivar 173 Director Revealed Rajinikanth Teams Up with Don Director Cibi Chakaravarthi
Photo Credit:

வெளியேறிய சுந்தர்.சி: ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல்; சில காரணங்களால் இப்படத்திலிருந்து சுந்தர்.சி வெளியேறிவிட்டார். அவர் சொன்ன கதையில் தயாரிப்பு தரப்பும், ரஜினி தரப்பும் கூறிய மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுத்து அவர் விலகியதாக கூறப்படுகிறது. எந்த பிரச்னையும் இல்லாமல் டீசன்ட்டாகவே இதிலிருந்து விலகியிருக்கிறார் அவர். அவர் வெளியிட்டிருந்த அறிக்கைகூட அவ்வளவு பக்குவமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குநரை தேடும் படலம்: சுந்தர்.சி வெளியே போனதைத் தொடர்ந்து தலைவர் 173 படத்தை யார் இயக்குவார் என்ற மில்லியன் டாலர் கேள்வி ரசிகர்களிடமும், திரைத்துறையிலும் இருந்தது. அஸ்வத் மாரிமுத்து, சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு, பார்க்கிங் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் என பலரது பெயர்கள் அடிபட்டுவந்தன. அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று தலைவர் 173 படத்தின் இயக்குநர் யார் என்பது அறிவிக்கப்படும் என ராஜ்கமல் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இவர்தான் இயக்குநர்: இந்நிலையில் தலைவர் 173 பட இயக்குநர் பற்றிய அதிகார்பபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படத்தை டான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவிருக்கிறார். 2022ஆம் ஆண்டு டான் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அப்போதே ரஜினியை சந்தித்து சிபி கதை சொல்லியிருந்தார். அந்தக் கதையைத்தான் இப்போது ரஜினியும், கமலும் சேர்ந்து டிக்கடித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. மேலும் டான் 100 கோடி ரூபாய் வசூலித்தது நினைவுகூரத்தக்கது. சிபி படத்தை இயக்குவது பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தாலும் ஒருதரப்பினர் கொஞ்சம் அப்செட்டும் ஆகியிருக்கிறார்கள். சம்பவம் செய்வாரா சிபி பொறுத்திருந்து பார்ப்போம். அடுத்த வருடம் பொங்கலுக்கு படம் ரிலீஸாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X