அஸ்வத் மாரிமுத்து, ராம்குமாருக்கு அல்வா?.. சைக்கிள் கேப்பில் புகுந்த சிபி.. ஹாலிவுட் பட காப்பியா?

சென்னை: சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து படம் பண்ணுவார் என தகவல்கள் வெளியான நிலையில், அந்த படமே ஆரம்பிக்காமல் தள்ளிப் போய்க்கொண்டே வந்த நிலையில், அடித்தது ஜாக்பாட் என்பது போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பு சிபி சக்கரவர்த்திக்கு கிடைத்துள்ளது.

டிராகன் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து, பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன், அ. வினோத் உள்ளிட்ட பல இயக்குநர்கள் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், கடைசியாக ரஜினிகாந்த் டிக் செய்திருப்பது சிபி சக்கரவர்த்தியை தான்.

Thalaivar 173 is a copycat of this Hollywood movie After Cibi Chakaravarthy ropes trolls starts
Photo Credit:

டான் படத்தின் மீதே ரசிகர்கள் ஏகப்பட்ட விமர்சனங்களை அடுக்கிய நிலையில், ரஜினிகாந்த் எப்படி சிபி சக்கரவர்த்தியை தேர்வு செய்தார் என்றும் இந்த படத்தின் அறிவிப்பை பார்த்தே ஹாலிவுட் பட காப்பி என்றும் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

தேசிங் பெரியசாமிக்கே நோ: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்க ஆசைப்பட்டு பக்காவான கதையை சொல்லி சில வருடங்கள் காத்துக் கிடந்த நிலையில், அவருக்கு நோ சொல்லிவிட்டார் ரஜினிகாந்த். கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்புவை வைத்து அந்த படத்தை ஆரம்பிக்க திட்டமிட்ட நிலையில், அதுவும் பல ஆண்டுகள் கால தாமதம் ஆகி கமல் தயாரிக்காமல் சிம்புவே தயாரிப்பதாக சொல்லப்பட்டு இதுவரை ஆரம்பிக்காமலே உள்ளது.

Thalaivar 173 is a copycat of this Hollywood movie After Cibi Chakaravarthy ropes trolls starts
Photo Credit:

டான் டைரக்டருக்கு சுக்கிரதிசை: கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சுந்தர். சி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அய்யோ சாமி ஆளை விடுங்க என எஸ்கேப் ஆகிவிட்டார். இந்நிலையில், ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு டான் பட டைரக்டர் சிபி சக்கரவர்த்திக்கு அடித்துள்ளது. கண்டிப்பாக அவருக்கு ராஜயோகம் தான் என்கின்றனர். அதே நேரத்தில் படம் படுத்துவிட்டால் லோகேஷ் கனகராஜ் நிலைமை தான் என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஹாலிவுட் பட காப்பியா?: படத்தின் டைரக்டர் அறிவிப்பு தான் வெளியானது. அதில், உள்ள கத்தரிக்கோல் டிசைனை பார்த்தே இந்த படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான 'தி அவுட்ஃபிட்' (The Outfit) படத்தின் காப்பியா என்றும் மாட்டிக்கிட்டியே சிபி என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். கிரஹாம் மூர் இயக்கத்தில் ஹாலிவுட்டின் மூத்த நடிகர் மார்க் ரைலான்ஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தி அவுட்ஃபிட். டெய்லருக்கும் கேங்ஸ்டர் க்ரூப்புக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை தான் படத்தின் கதை என்கின்றனர். இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி செய்யப் போகிறாரா? அல்லது தனது சொந்தக் கதையை செய்யப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 2027ம் ஆண்டு பொங்கல் தலைவர் பொங்கலாக மாறப்போகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X