Thalaivar 173: சுந்தர் சி போனா போகட்டும்.. தேசிய விருது வென்ற இயக்குநரை கிளிக் செய்த கமல் - ரஜினி!

சென்னை: கடந்த வாரம் முழுவதுமே தமிழ் திரையுலகில் பெரும் சர்ச்சையாக இருந்த விவகாரம் என்றால் அது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173வது படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர் சி விலகியதுதான். கமல்ஹாசன் படத்தை தயாரிக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, சுந்தர் சி படத்தை இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானது. அதன் பின்னர் ஏற்பட்ட சில மனக்கசப்புகளால், ரஜினி மற்றும் கமல் என இருவரிடமும் எதுவும் தெரிவிக்காமல், சுந்தர் சி தன்னிச்சையாக படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இது பெரும் பேசு பொருளாக மாறியது. இந்நிலையில் கமல்ஹாசன் தயாரிக்க, ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் இயக்குநர் யார் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. இந்நிலையில் இந்த கேள்விக்கு கிட்டத்தட்ட உறுதியான பதில் கிடைத்துவிட்டது என்றே கூறலாம்.

ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். படம் வரும் ஆண்டின் கோடை விடுமுறை அல்லது ஜூன் மாதத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவும் இணைந்து உள்ளார் என்று தகவல்கள் பரவி வருகிறது. இந்த படத்திற்கு பின்னர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் எது என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. வேட்டையன் படத்தின் போதே, கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கிறார் என்றும், இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால் கூலி படத்தின் தோல்விக்குப் பின்னர், லோகேஷ் கனகராஜை வேண்டாம் என்று ரஜினி முடிவு எடுத்ததாகவும் கூறப்பட்டது.

வெளியேறிய சுந்தர் சி: அதன் பின்னர்தான், படத்தின் இயக்குநரைத் தேடும் பணிகள் நடைபெற்றது. அதில் சுந்தர் சி-யை அழைத்து இருவரும் பேசியதில் சுந்தர் சி படத்தில் கமிட் ஆனார். ஆனால் அவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர் படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும்போது, இந்த படத்தை இயக்க யார் வேண்டுமானாலும் வரலாம், கதை நன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தான் எங்களுடைய நோக்கம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். அதன் பின்னர் பலரும் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டிற்கு கதை சொல்ல படையெடுத்து வந்தனர்.

Thalaivar 173 Most Chance To Directs Parking Director Ramkumar Balakrishnan Under Kamalhaasan Production

தேசிய விருது பெற்ற இயக்குநர்: இந்நிலையில், பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் ரஜினியைச் சந்தித்து கதையின் ஒன் லைனை சொல்லி உள்ளதாகவும், அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மிகவும் பிடித்துப் போனதாகவும், கதையை மேலும் டெவலப் செய்து கொண்டு வாருங்கள் என்று கூறியதாகவும் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது. தலைவர் 173 வது படத்திற்கு இயக்குநராக ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றும் கூறப்படுகிறது.

சிம்பு படம்: கதை கேட்கும் விவகாரங்களில் கதையை கேட்பதோடு கமல்ஹாசன் நிறுத்திக் கொள்கிறாராம். முடிவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் வழங்கிவிட்டு, ஒதுங்கிக் கொள்கிறாராம். சூப்பர் ஸ்டாரின் மனதைக் கவரும் கதையைச் சொல்லும் இயக்குநர், இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெறுவார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. ராம்குமார் பாலகிருஷ்ணா தற்போது சிம்புவின் 49வது படத்தை இயக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X