ரத்தம் சொட்டும் கத்தியோடு.. கமலைத் தொட்ட ரஜினி.. தலைவர் 173 படத்தின் முரட்டு போஸ்டர்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்கள் என்றாலே பாக்ஸ் ஆபீஸில் எப்போதும் சுனாமிதான். சமீபத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' படம் நிறைவடைந்ததை தொடர்ந்து, ரஜினிகாந்த் அடுத்ததாகத் தனது 173வது திரைப்படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார். தற்காலிகமாக 'தலைவர் 173' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் குறித்த, ஒட்டுமொத்த இந்திய சினிமாவையுமே அதிர வைக்கும் அதிகாரப்பூர்வ அப்டேட் இன்று வெளியாகியுள்ளது.
கமல் தயாரிப்பில் ரஜினி: இப்படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமே, உலகநாயகன் கமலஹாசனின் 'ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்' (RKFI) நிறுவனம் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்துதான் இந்த பிரம்மாண்ட ப்ராஜெக்ட்டைத் தயாரிக்கிறது. 'ஓ மை கடவுளே', 'டிராகன்' போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இளம் இயக்குனர் ஆஷ்வந்த் மாரிமுத்து இத்திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சினிமா வட்டாரங்களில் கசிந்துள்ள தகவலின்படி, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் முதன்முறையாக இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கப் போகிறார் என்றும், ரஜினியின் மகனாகப் பிரபல மலையாள நடிகர் பாசில் ஜோசப் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரத்தம் சொட்டும் கத்தி: இன்று 'தலைவர் 173' படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது இணையத்தையே அதிர வைக்கும் ஒரு முரட்டுத்தனமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்தப் போஸ்டரில் நரம்புகள் புடைக்க, வெட்டுக் காயங்களுடன் ரத்தம் வழியும் ஒரு முரட்டுத்தனமான கை, கூர்மையான ஒரு சிறிய கத்தியை தலைகீழாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கத்தியின் முனையில் இருந்து ரத்தம் சொட்டு சொட்டாகக் கீழே வழிகிறது.
தலைப்பு என்ன?: மேலும் அந்த கையின் மணிக்கட்டில் 'முருகன் வேல்' கொண்ட ஒரு காப்பு அணிவிக்கப்பட்டுள்ளது. 24.6.26 THALAIVAR 173 - 10:00 AM என்ற வாசகத்துடன், படத்தின் அதிகாரப்பூர்வ 'டைட்டில்' நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என RKFI நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரத்தம் சொட்டும் இந்த முரட்டுத்தனமான போஸ்டரைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள், இது ஒரு சைக்கோ த்ரில்லர் படமா? என்றும், படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்றும் சமூக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications