Rajini Kamal: ரஜினி கமல் Real OG சம்பவம் லோடிங்.. பண்டிகைக்கு தயாராகுங்க.. தியேட்டர்கள் இனி தாங்காது

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஆண்டவர் கமல்ஹாசன் இணைந்து நடிக்கிறார்கள் என்ற தகவலே மொத்த தென்னிந்திய சினமாவுமே ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டது. இப்படி இருக்கையில் இந்த படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது. அதேபோல் படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் தகவல்கள் வெளியானது. இப்படி இருக்கும்போது இந்த படம் குறித்த மாஸான அப்டேட்டை படக்குழு பிப்ரவரி 19ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இதில் ரஜினி மற்றும் கமல் ஒன்றாக இருக்கும் படியான போஸ்டர் வரும் 21ஆம் தேதி வரும் என்று அறிவித்துள்ளது. தற்போது வெளியாகி உள்ள போஸ்டரைப் பார்த்தால், அதில் ஒரு கார் மட்டும் இருக்கிறது.

Thalaivar - Aandavar Combo Rajini - Kamal The Real OG Action is Loading Get Ready for the Festival

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 173ஆவது படத்தை உலக நாயகனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் முடிந்த பின்னர் கமல்ஹாசன் மற்றும் ரஜினி என இருவரும் இணைந்து நடிக்கவுள்ளார்கள். அந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார்.

வெளியான தகவல்: இந்த படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வீடியோ ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்டதாகவும், அதில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் என இருவரும் ஒரு மெக்கானிக் ஷெட்டில் இருந்து, காரில் புறப்படுவது போல காட்சி படமாக்கப்பட்டது எனவும், இருவருமே செம ஸ்டைலாகவும் செம யங்காகவும் இருந்ததாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அதை உறுதிப் படுத்தும் விதமாக கார் மெக்கானிக் ஷெட்டில் கார் இருப்பது போல போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

பக்காவான பிளான்: 2027ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரஜினியை வைத்து கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று படக்குழு முடிவெடுத்துள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியிலேயே ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், இவர்கள் இருவரும் நடிக்கும் இந்த படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிபி சக்ரவர்த்தி படத்தில் ரஜினி நடிக்கும் காலத்தில் கமல் ஹாசன் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பு - அறிவு மாஸ்டர்களின் படத்தில் நடித்து முடித்துவிடுவார் என்றும், அதற்குள் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தின் திரைக்கதையை நெல்சன் தயார் செய்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X