twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒன்லி ஒன் சூப்பர் ஒன்.. பிளாக் அண்ட் ஒயிட் முதல் 3டி மோஷன் பிக்சர் வரை கலக்கிய ரஜினி!

    |

    சென்னை: தமிழ் சினிமாவில் பிளாக் அண்ட் ஒயிட், ஈஸ்ட்மேன் கலர், டிஜிட்டல், 3டி, 3டி மோஷன் பிக்சர் என 40 ஆண்டுகளில் தொழில்நுட்ப ரீதியாகவும் அனைத்து தளங்களிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கால் பதித்துள்ளார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்து நாளையுடன் 69 வருடங்கள் ஆகின்றன. ஆண்டுதோறும் ரஜினியின் பிறந்த நாளன்று அவர் ஊரில் இருப்பதில்லை. இதனை வழக்கமாக கொண்டுள்ளார்.

    அவரது பிறந்த நாளை முன்னிட்டு ரஜினி மக்கள் மன்றம் டிசம்பர் 1 முதல் பல்வேறு நலத்திட்டங்களையும், பல கோயில்களில் விஷேச பூஜைகளையும் செய்து வருகின்றது.

    படையப்பா படத்தில் வரும் ஒரே பாட்டில் சூப்பர்ஸ்டார் பணக்காரர் ஆவதை போல நிஜ வாழ்வில் எவராலும் ஆக முடியாது. கண்டக்டராக இருந்து சூப்பர்ஸ்டாரா உயர்ந்துள்ள ரஜினியின் டெக்னிக்கல் சினிமா குறித்து இங்கே பார்ப்போம்.

    லண்டன் போலீசாரிடம் சிக்கி திணறிய ரஜினி ஹீரோயின்.. சரியான நேரத்தில் சென்று காப்பாற்றிய விமல்!லண்டன் போலீசாரிடம் சிக்கி திணறிய ரஜினி ஹீரோயின்.. சரியான நேரத்தில் சென்று காப்பாற்றிய விமல்!

    ராஜா சின்ன ரோஜா

    ராஜா சின்ன ரோஜா

    ஏ.வி.எம். தயாரிப்பில் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் 1989ம் ஆண்டு வெளியான ராஜ சின்ன ரோஜா படத்தில் ரஜினிகாந்த், கெளதமி, ரகுவரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற பாடல் ரஜினியின் பெருமைகளை சொன்னாலும், ராஜா சின்ன ரோஜாவோட காட்டுப் பக்கம் வந்தாரா பாடலில் வந்த அனிமேஷன் விலங்குகள் தான் அப்போது எல்லா குழந்தைகளையும் தியேட்டருக்கு வரவழைத்த மேஜிக்கை நிகழ்த்தியது.

    பிளாக் & ஒயிட் டு கலர்

    பிளாக் & ஒயிட் டு கலர்

    அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு என பிளாக் அண்ட் ஒயிட்டில் தொடங்கிய நடிகர் ரஜினிகாந்தின் திரைப்பயணம் 1982ம் ஆண்டு வெளியான போக்கிரி ராஜா படத்தின் மூலம் ஈஸ்ட்மேன் கலருக்கு மெருகேறியது. அதன் பின்னர், டிஜிட்டல் கலருக்கு முன்னேறியது. இதற்கெல்லாம் ஒரு படி முன்னேறி சிவாஜி படத்தில் கருப்பாக இருந்த ரஜினிகாந்தை கலர்ஃபுல் ரஜினிகாந்தாக நம் கண் முன் காட்டியிருந்தார் இயக்குநர் ஷங்கர்.

    3டி கிங்

    3டி கிங்

    புதிய தொழில்நுட்பங்களை தமிழுக்கு கொண்டு வருவதில் வல்லவரான கமல்ஹாசனை நடிகர் ரஜினிகாந்த், 3டி தொழில்நுட்பத்தில் வீழ்த்தியுள்ளார். ரஜினி நடித்த சிவாஜி படம் 3டியில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு வெளியான 2.0 படம் ஹாலிவுட் தரத்தில் 3டியில் அசத்தியது.

    3டி மோஷன் பிக்சர்

    3டி மோஷன் பிக்சர்

    3டியில் மட்டுமின்றி, கோச்சடையான் படத்தில் 3டி மோஷன் பிக்சரில் ரஜினி கால் பதித்துள்ளார். சுல்தான் தி வாரியர் என்ற பெயரில் 2007ம் ஆண்டே தொடங்கப்பட்ட அந்த படம், பல மாற்றங்களை சந்தித்து 2014ம் ஆண்டு கோச்சடையான் என்ற பெயரில் அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கத்தில் வெளியானது.

    4 பிளாட்ஃபார்ம்

    4 பிளாட்ஃபார்ம்

    இந்தியளவில் வேறு எந்த நடிகரும் நடிக்காத அளவுக்கு பிளாக் அண்ட் ஒயிட், கலர், 3டி, மோஷன் பிக்சர் என தொழில்நுட்பத்தில் உள்ள 4 பிளாட்ஃபார்மிலும் நடிகர் ரஜினிகாந்த் நடித்து அசத்தியுள்ளார். எந்திரன் மற்றும் 2.0 படங்களில் டெக்னாலஜியின் முழு வடிவான ரோபோவாகவும் தனது அசத்தல் நடிப்பை வெளிப்படுத்திய ரஜினி என்றும் எல்லாருக்கும் சூப்பர்ஸ்டாராக உச்சத்தில் இருக்கிறார்.

    English summary
    Superstar of Tamil cinema, Rajinikanth, will be the first Indian to act in four formats of films, black and white, color, 3D and animation.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X