Thalaivar Thambi Thalaimaiyil X Review - தலைவர் தம்பி தலைமையில் ட்விட்டர் விமர்சனம்.. ஜீவா பொங்கல் வின்னர்?

சென்னை: மலையாளத்தில் ஃபேலிமி படத்தை இயக்கிய நிதிஷ் சகாதேவ் இயக்கியிருக்கும் படம் தலைவ தம்பி தலைமையில். இதில் ஜீவா, தம்பி ராமைய்யா, ஜென்சன் திவாகர், இளவரசு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கும் இப்படமானது இன்று வெளியாகிறது. நேற்று பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படத்தை பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் வைத்திருக்கிறார்கள்.

மலையாளத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான படம் ஃபேலிமி. அங்கே ரிலீஸாகி சக்கைப்போடு போட்டது அப்படம். அதனை இயக்கியர் நிதிஷ் சகாதேவ். அவர் இப்போது தமிழில் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம்தான் தலைவர் தம்பி தலைமையில். இதில் ஜீவா, பிரார்த்தனா, தம்பி ராமைய்யா, இளவரசு, ஜென்சன் திவாகர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. முதன்முறையாக நிதிஷ் கோலிவுட்டுக்கு வந்திருப்பதால் பெரிய எதிர்பார்ப்பு படத்துக்கு நிலவுகிறது.

ஜீவாவுக்கு ஒரு ஹிட் தேவை: படத்தின் ஹீரோ ஜீவாவை பொறுத்தவரை இப்போதைக்கு அவருக்கு ஒரு ஹிட் கண்டிப்பாக தேவைப்படுகிறது. கடைசியாக நடித்த அகத்தியா படமும் தோல்வியைத்தான் சந்தித்தது. எவ்வளவோ உயரத்துக்கு போயிருக்க வேண்டிய நடிகர் என்ற பெயரை பெற்ற ஜீவா இந்தப் படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார். இந்நிலையில் இன்று படம் ரிலீஸாகிறது. நேற்று பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

Thalaivar Thambi Thalaimaiyil X Review Jiiva s Pongal Entertainer Wins Positive Early Reactions
Photo Credit:

எப்படி இருக்கிறது படம்?: படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் வைத்திருக்கிறார்கள். படம் பார்த்த ஒருவர், "இந்தப் படத்துக்கு ஐந்துக்கு 3.25 மதிப்பெண் கொடுக்கலாம். முதல் பாதி செம ஃபன். இரண்டாம் பாதி குட். தலைவர் தம்பி தலைமையில்தான் க்ளீன் பொங்கல் வின்னர்" என புகழ்ந்திருக்கிறார். அதேபோல் இன்னொருவர், 'தலைவர் தம்பி தலைமையில் 2026ஆம் ஆண்டை ஜீவாவுக்கு நல்லவிதமாக தொடங்கி வைத்திருக்கிறது. யு சான்றிதழ் பெற்ற படம் அன்லிமிட்டெடாக ஹியூமரை கொடுக்கிறது. தம்பி ராமைய்யா, ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். விஷ்ணு விஜய்யின் பின்னணி இசை நன்றாக இருக்கிறது. இந்தப் படம் க்ளீன் என்ட்டெர்டெயினர். கண்டிப்பாக பொங்கல் வின்னர்" என குறிப்பிட்டிருக்கிறார்.

மம்மூட்டி நடித்திருக்க வேண்டியது: இன்னொரு ரசிகரோ, "இந்த வருஷ பொங்கல் ரேஸ்ல dark horse - ஜீவா நடித்திருக்கும் தலைவர் தம்பி தலைமியில்தான். படம் பார்த்துட்டு 'இதுவே மலையாளத்துல வந்திருந்தா, கொண்டாடியிருப்பானுங்க'ன்னு சொல்ல போற அன்பர்களுக்கு... ஒரு கொசுறு தகவல். இதுவே மலையாளத்துல மம்மூட்டி நடிச்சிருக்க வேண்டிய கதை தான் (இந்த படத்தை மிஸ் பண்ணிட்ட வருத்தத்துல, அடுத்து உடனே இந்த டைரக்டர் கூட ஒரு படம் பண்றார் மம்மூக்கா).

பாசில் ஜோசப் நடிச்ச Falimy படம் எடுத்த இயக்குனர், தமிழ்ல எடுத்திருக்குற படம் இது. காமெடியை விட டிராமா கொஞ்சம் அதிகம் இருக்குற ஒரு நல்ல dramedy! ஒரே nightல கல்யாண வீட்டுல நடக்குற கதைகள் உங்களுக்கு பிடிக்கும்ன்னா, not to be missed" என ரெக்கமண்ட் செய்துள்ளார்.

மீண்டும் ஸ்கோர் செய்துவிட்டார்: தலைவர் தம்பி தலைமையில் 5க்கு 3.25 மதிப்பெண். முழு பொழுதுபோக்கு மற்றும் ஸ்ட்ராங்கான மெசேஜ். ஃபேலிமி படத்துக்கு பிறகு நிதிஷ் சகாதேவ் மீண்டும் ஸ்கோர் செய்துவிட்டார். பொங்கலுக்கு கண்டிப்பாக பார்க்கலாம்" என குறிப்பிட்டுள்ளார்.

படம் பார்த்த இன்னொருவர், 'தலைவர் தம்பி தலைமையில் படத்துக்கு 5க்கு 3.75 மதிப்பெண். ஒரே இரவில் நடக்கும் கதை. இரண்டு பக்கத்து வீட்டுக்காரர்களுக்கிடையே நடக்கும் மோதல்தான் படம். ஜீவா அவர் ஏற்றிருக்கும் ரோலுக்கு நியாயம் செய்திருக்கிறார். பக்காவான ஃபேமிலி என்ட்டெர்டெயினரை இயக்குநர் நிதிஷ் வழங்கியிருக்கிறாற்" என புகழ்ந்திருக்கிறார். இப்படி இதுவரை படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன.

More from Filmibeat

Read more about: jiiva ஜீவா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X