வரும் வரும்னாங்க வரல.. அடித்து நொறுங்கிய ஜீவா.. TTT படத்தை புகழ்ந்த மன்சூர் அலிகான்!
சென்னை: தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், நடிகர் ஜீவா கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'தலைவர் தம்பி தலைமையில்'. இப்படம் பொங்கலுக்கு வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. மலையாள இயக்குநர் நிதேஷ் இயக்கிய இந்த படத்தில் தம்பிராமையா, இளவரசன், பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர். முதலில் ஜனவரி 30ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம், ஜனநாயகன் திரைப்படம் வெளியாகாததால் தேதி மாற்றப்பட்டு, 15ந் தேதி வெளியாகி அதிரடியாக வசூலை குவித்து வருகிறது. மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 11 கோடிக்கும் வசூல் செய்துள்ளது. படத்தை பார்த்த பலர் இது ஜீவா பொங்கல் என படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் வெற்றி குறித்து வீடியோ வெளியிட்ட நடிகர் மன்சூர் அலிகான், வரும் வரும்னு சொன்னாங்க வரல, எங்கும் அரசியல் எதிலும் அரசியல். பராசக்தி படம் பொங்கலுக்கு வெளியாகி தமிழர்களின் தியாகத்தை தமிழர்களுக்கும், மாணவர்களும் சொல்லப்பட்டது. அதற்கு நாம் மதிப்பெண் போடக்கூடாது. ஆனால், லிஸ்டிலேயே இல்லாத படம் 'தலைவர் தம்பி தலைமையில்' எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. கடைசியில் இது ஜீவா பொங்கலாக மாறிவிட்டது. துபாய் தமிழன், திட்டக்குடி தமிழன் கண்ணண் ரவி தயாரித்த படம் பட்டையை கிளப்புது. இந்த நேரத்தில் கலைஞரின் பேச்சு தான் எனக்கு நினைவிற்கு வருகிறது. ஒரு பக்கம் பராசக்தி, ஒரு பக்கம் மேள சத்தம், மற்றொருபுறம் ஓல சத்தம் கேட்கிறது இன்று.
சர்க்கரை பொங்கல்: அதே மேளம், ஓல சத்தத்தை எடுத்துக்கொண்டு மலையாள இயக்குனர் நிதிஷ் சஹாதேவ் 'தலைவர் தம்பி தலைமையில்' இயக்கி அடித்து நொறுக்கிவிட்டார். ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, ஜென்சன் திவாகர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த காலத்து கே.பி.சுந்தராம்பாள் மாதிரி கதாநாயகி பிராத்தனா சிறப்பாக நடித்து இருக்கிறார். படம் வெளியான தியேட்டர்களில் எல்லாம் சர்க்கரை பொங்கல் தான், ஜீவா பொங்கல் தான் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அடுத்து தேர்தல் களத்தில் சந்திப்போம் என பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











