ரஜினியின் அடுத்தப்பட அறிவிப்பு.. அதிரும் டிவிட்டர்.. ட்ரென்டாகும் தலைவர் 168! #Thalaivar168
Recommended Video
சென்னை: ரஜினியின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து டிவிட்டரில் தலைவர் 168 என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 168வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டது.
இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கவுள்ளார். ரஜினியின் 168வது படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

திக்குமுக்காடும் டிவிட்டர்
#Thalaivar168 என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதனை ட்ரென்ட் செய்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். தலைவர் 168 ஹேஷ்டேக்கால் டிவிட்டர் வலைதளம் திக்குமுக்காடி வருகிறது.
தரமான சம்பவம்
தலைவர் 168 கொல மாஸ் சிறப்பான தரமான சம்பவம் என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.
தலைவர் 168 - தீபாவளி
பாஷா - பொங்கல்
முத்து - தீபாவளி
2020
தர்பார் - பொங்கல்
தலைவர் 168 -தீபாவளி என்று பதிவிட்டிருக்கிறார் இந்த ரசிகர்.
மரண வெய்ட்டிங்
ரஜினியின் அடுத்த படத்தின் அறிவிப்பை கேட்டு மரண வெய்ட்டிங் என தெரிவித்திருக்கிறார் ரஜினியின் இந்த ரசிகர்.
மரண மாஸ்
அனிருத் இசையமைத்தால் நமக்கு இன்னுமொரு மரண மாஸ் பாடல் கிடைக்கும் என்கிறார் இந்த நெட்டிசன்.
மியூஸிக் யுவன்
தலைவா.... மியூஸிக் யுவன்ஷங்கர் ராஜாதான் வேண்டும் என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
சம்பவம் கண்டிப்பா இருக்கும்
ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த நியூஸ் பாக்கும் போது......
வாழ்த்துக்கள் அண்ணா..... சம்பவம் கண்டிப்பா இருக்கும்.. என்று கூறுகிறார் இந்த ரசிகர்.
அஜித் ஆசை நிறைவேறியது
விவேகம் சரிவின் போது கிண்டலுக்கு உள்ளான சிவாவிற்கு தல தன் விஸ்வாசத்திற்காக விஸ்வாசம் படம் கொடுத்தார். விஸ்வாசம் மெகா ப்ளாக்பஸ்டருக்கு பின் ரஜினி விஜய் சூர்யா சிவாவிடம் கதை கேட்க சிவா அடுத்த படத்திற்கு தேர்வு செய்தது ரஜினியை.. தல அஜித் ஆசை நிறைவேறியது.. என்கிறார் இந்த ரசிகர்.
முரட்டுக்காளை
மாஸ் ஓவர் லோடட்.. கிராமத்து கதையா இருந்தா பி மற்றும் சி தர மக்கள் செமயா என்ஜாய் பண்ணுவாங்க.. லைக் முரட்டுக்காளை.. என்று ரசிகர்.
டபுள் தமாகா
இந்த வருஷம் தலைவர் பிறந்தநாளுக்கு தலைவர் 168 & தர்பார் ட்ரைலர்.. டபுள் தமாகா.. என்று கூறுகிறார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications











