Thalaivar 171: நோ சொன்ன ஷாருக்கான்... ரன்வீர் சிங்கை வளைத்துப் போட்ட லோகேஷ்... தலைவர் 171 அப்டேட்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் கேமியோ ரோலில் நடிக்கலாம் என லோகேஷ் கனகராஜ்ஜே அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ரன்வீர் சிங்கை வளைத்துப் போடும் லோகேஷ்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் தலைவர் 170 படத்தின் டைட்டில் வேட்டையன் என படக்குழு அறிவித்துவிட்டது. தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திற்குள் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

தலைவர் 171 மூலம் முதன்முறையாக ரஜினி - லோகேஷ் கூட்டணி இணைகிறது. இதனால் தலைவர் 171 படத்துக்கு மிகப் பெரிய அளவில் ஹைப் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் மாஸ்டர்ஸ் ஆக்ஷன் கோரியோகிராபி செய்கின்றனர். இதுதவிர தலைவர் 171 படத்தில் யாரெல்லாம் இணைந்துள்ளனர் என்பது தெரியவில்லை. ஆனால், சிவகார்த்திகேயன் மட்டும் கன்ஃபார்ம் எனத் தெரிகிறது.
தலைவர் 171ல் ரஜினி நெகட்டிங் ஷேடில் கேங்ஸ்டர் ரோலில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் மலையாளத்தில் இருந்து மம்முட்டி, பிருத்விராஜ் ஆகியோர் இணையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் பாலிவுட்டில் இருந்து ஷாருக்கானை நடிக்க வைக்க முயற்சித்தார் லோகேஷ். ஆனால், ஷாருக்கான் நோ சொல்லிவிட, இப்போது ரன்வீர் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் லோகேஷ்.
லோகேஷ் - ரன்வீர் சிங் இடையே ஒரு சந்திப்பு மட்டுமே நடந்துள்ளது. அதனடிப்படையில், இதுவரை ரன்வீர் சிங் இந்தப் படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தாலும் லோகேஷிடம் முழு கதையையும் கேட்டுள்ளாராம். ஆனால் இப்போது தான் தலைவர் 171 ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை தொடங்கியுள்ளார் லோகேஷ். இதனால் விரைவில் மீண்டும் ஒரு மீட்டிங் நடக்கும் என்றும், அப்போது ரன்வீர் சிங்கின் கால்ஷீட் கன்ஃபார்மாக கிடைத்துவிடும் எனவும் லோகேஷ் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.
முன்னதாக இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், அருண் விஜய் ஆகியோரில் யாராவது ஒருவர் நடிக்கலாம் என சொல்லப்பட்டது. இந்நிலையில் திடீரென தலைவர் 171 படத்தில் பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் படப்பிடிப்புத் தொடங்கும் முன்னர் தான் தலைவர் 171 கூட்டணி குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











