Thalaivar171: லோகேஷின் அடுத்த மிரட்டல் ‘RCU’... ரஜினி சினிமாட்டிக் யூனிவர்ஸில் உருவாகும் தலைவர் 171
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். முதன்முறையாக ரஜினி - லோகேஷ் கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ஷன் ஜானரில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் ரஜினி நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தலைவர் 171 மூவி மூலம் புதிய சினிமாட்டிக் யூனிவர்ஸை ரெடி செய்துள்ளாராம் லோகேஷ்.
ரஜினி சினிமாடிக் யூனிவர்ஸ்: ஜெயிலர் வெற்றிக்குப் பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார் சூப்பர் ஸ்டார். கடந்த வாரம் ரஜினி கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் வெளியானது. அதன் தொடர்ச்சியாக விரைவில் வேட்டையன் படமும் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. வேட்டையன் முடிந்ததும் தலைவர் 171 படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார் ரஜினி.

லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் ஷெட்யூல் ஷூட்டிங் வெளிநாட்டில் நடைபெறவுள்ளதாகவும், அதன் பின்னர் சென்னை உட்பட பல பகுதிகளில் நடக்கும் எனவும் சொல்லப்படுகிறது. ரஜினியுடன் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.
அதேநேரம் இந்தப் படத்தில் ரஜினி நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதாகவும், அவரது தோற்றத்தை De-Aging டெக்னாலஜியில் இளமையாக மாற்றவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக லோகேஷ் கனகராஜ் பக்காவாக பிளான் செய்து படப்பிடிப்பை நடத்தவுள்ளாராம். ஐமேக்ஸ் கேமராவில் ஷூட் செய்யப்படும் தலைவர் 171, 3டி தொழில்நுட்பத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் தலைவர் 171ல் இருந்து சில தரமான அப்டேட்கள் கிடைத்துள்ளன.
அதாவது தலைவர் 171 இரண்டு பாகங்களாக ரிலீஸாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மொத்த படப்பிடிப்பையும் ஒரே கட்டமாக முடித்துவிட உள்ளாராம் லோகேஷ். அதேபோல், இதற்கு முன்பு லோகேஷின் படங்கள் LCU என வந்ததை போல, தலைவர் 171 RCU என்ற கான்செப்ட்டில் உருவாகவுள்ளதாம். அதாவது ரஜினி சினிமாட்டிக் யூனிவர்ஸ் என வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இதனால் தலைவர் 171 ரஜினியின் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தலைவர் 171 முதல் பாகம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் எனவும் இரண்டாம் பாகம் 2026ம் ஆண்டு ரிலீஸாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் ரஜினியின் RCU லோகேஷ் கனகராஜ்ஜின் LCU படங்களுடன் கனெக்ட் ஆகுமா என்பது குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











