தலைவாசல் விஜய்க்கு இன்று 58வது பிறந்த நாள்... பிரபலங்கள் வாழ்த்து !

சென்னை : எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது மிரட்டும் நடிப்பின் மூலம் மக்களை ரசிக்க வைத்து வருபவர் நடிகர் தலைவாசல் விஜய்.

காதலுக்கு மரியாதை, அருள், காசி உள்ளிட்ட பல படங்களில் பல கதாபாத்திரங்களில் தோன்றி தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த ரசிகராக இன்று வரை விளங்கி வருகிறார்.

தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் பல்வேறு மக்களையும் ரசிக்க வைத்து வரும் நடிகர் தலைவாசல் விஜய் ஆகஸ்ட் 4 ஆம் தேதியான இன்று தனது 58 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது நண்பர்கள் ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தலைவாசல் விஜய் என பெயர்

தலைவாசல் விஜய் என பெயர்

1992 ஆம் ஆண்டு வெளியான தலைவாசல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட விஜய், ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த ஒரு வேடமாக இருந்தாலும் அதில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இன்று வரை ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அவ்வாறு இவர் நடித்த தலைவாசல் திரைப்படத்திற்கு பிறகு பலராலும் தலைவாசல் விஜய் என அழைக்கப்பட்டார்.

வெற்றி திரைப்படங்கள் ஏராளம்

வெற்றி திரைப்படங்கள் ஏராளம்

தமிழில் வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களை எடுத்து பார்த்தால் அதில் கண்டிப்பாக இவரின் பங்களிப்பு இல்லாமல் இருக்காது, அவ்வாறு தமிழ் திரைப்படத்துறையில் இவர் நடித்த வெற்றி திரைப்படங்கள் ஏராளம், குறிப்பாக காதலுக்கு மரியாதை, காசி, தேவர்மகன், மகாநதி உள்ளிட்ட பல படங்களில் இவரின் நடிப்பு மிகவும் பேசப்பட்டு வந்துள்ளது.

"கவலைப்படாதே சகோதரா"

நடிப்பு மட்டுமல்லாமல் ஒரு சில கானா பாடல்களிலும் தோன்றி நாம் அனைவரையும் ரசிக்க வைத்து வரும் தலைவாசல் விஜய், முரளி மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான காதலே நிம்மதி திரைப்படத்தில் வரும் "வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி", மற்றும் தல அஜித் நடித்த காதல் கோட்டை திரைப்படத்தில் வரும் "கவலைப்படாதே சகோதரா" உள்ளிட்ட பிரபலமான பாடல்களின் மூலம் நடனம் ஆடியும் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார்.

எக்கச்சக்கமான படங்கள்

எக்கச்சக்கமான படங்கள்

பல திரைப் படங்களின் மூலமும் ஒரு சில பாடல்களின் மூலமும் நம் அனைவரையும் ரசிக்க வைத்து வந்த தலைவாசல் விஜய் தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். அழகு, கங்கா யமுனா சரஸ்வதி உள்ளிட்ட பிரபலமான டிவி நெடுந்தொடர்களில் நடித்து வரும் தலைவாசல் விஜய் நடிப்பு துறைக்கு ஆற்றிய தொண்டு மிகப் பெரியது. இதுவரை கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார்.

பிறந்த நாள்

பிறந்த நாள்

எந்த ஒரு திரை பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பின் மூலமும் விடாத முயற்சியின் மூலமும் திரைத்துறையில் மிகச் சிறந்த நடிகர் என தனக்கென ஒரு இடத்தை பெற்றுள்ள தலைவாசல் விஜய் ஆகஸ்ட் 4 ஆம் தேதியான இன்று தனது 58வது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி அவரது ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் பல்வேறு திரை பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி மகிழ்வித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X