twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரொம்ப மோசம்.. தென்னிந்திய சினிமாவில் பாலின பிரச்சனைகள் அதிகம்.. தலைவி பட நடிகை பொளேர்!

    |

    சென்னை: தென்னிந்திய சினிமாவில் பாலின ரீதியான பிரச்சனைகள் அதிகம் என தலைவி பட நடிகை போட்டுடைத்துள்ளார்.

    Recommended Video

    SINGER VELMURUGAN | நம்ம மக்கள் நல்ல மனசுக்கு எதுவும் ஆகாது | V-CONNECT | FILMIBEAT TAMIL

    ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி, பிரகாஷ்ராஜ் நடிப்பில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் தலைவி என்கிற பெயரில் உருவாகி வருகிறது.

    இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தமாகி உள்ள மராத்தி நடிகை பாக்யஸ்ரீ சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.

    6 மாதத்தில் 7 படங்களை இழந்த சுஷாந்த் சிங்.. ஒரு நடிகரை கொன்று விட்டார்கள்.. சஞ்சய் நிருபம் ஆவேசம்! 6 மாதத்தில் 7 படங்களை இழந்த சுஷாந்த் சிங்.. ஒரு நடிகரை கொன்று விட்டார்கள்.. சஞ்சய் நிருபம் ஆவேசம்!

    சல்மான் கான் ஜோடி

    சல்மான் கான் ஜோடி

    சல்மான் கான் நடிப்பில் 1989ம் ஆண்டு வெளியான ‘மைனே பியார் கியா' படத்தின் மூலம் சினிமா உலகுக்கு மிக இளம் வயதிலேயே அறிமுகமானவர் நடிகை பாக்யஸ்ரீ. அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு, சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதும் வழங்கப்பட்டது.

    ரஜினி படத்தில்

    ரஜினி படத்தில்

    கே.சி. பகோடியா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 1992ம் ஆண்டு பாலிவுட்டில் உருவான 'தியாகி' எனும் இந்தி படத்தில் முக்கியமான வேடத்தில் நடிகை பாக்யஸ்ரீ நடித்திருந்தார். கன்னடத்தில் விஷ்ணுவர்தன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற தேவா படத்தின் இந்தி ரீமேக்காக அந்த படம் உருவாகி இருந்தது.

    தென்னிந்திய சினிமாவில்

    தென்னிந்திய சினிமாவில்

    தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த நடிகை பாக்யஸ்ரீ, அமவரகண்டா எனும் கன்னட படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ஓம்காரம், ராணா உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்த இவர், பின்னர், மராத்தி, வங்காளம் மற்றும் போஜ்புரி மொழிகளில் பல படங்களில் நடித்து வந்தார்.

    தமிழில்

    தமிழில்

    இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் மறைந்த தமிழக முதல்வரும் முன்னாள் நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான தலைவி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பாக்யஸ்ரீயை நடிக்க வைக்க நடிகை கங்கனா தற்போது இவரை தமிழுக்கு அழைத்து வந்துள்ளார்.

    பாலின பிரச்சனை

    பாலின பிரச்சனை

    இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தென்னிந்திய சினிமாவில் பாலின ரீதியான பிரச்சனைகள் அதிகம் இருப்பதாகவும், ஆரம்பத்தில் கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் தான் நடிக்கும் போது, அதனை மிகவும் உணர்ந்து வருந்தியதாகவும், அதனால், தான் தென்னிந்திய மொழிகளில் நடிப்பதை குறைத்துக் கொண்டேன் என்றும் கூறியுள்ளார்.

    ஆணாதிக்கம்

    ஆணாதிக்கம்

    ஆரம்பத்தில் ஒரு தென்னிந்திய மொழி படத்தில் தான் நடிக்க வந்த போது, இங்கே படங்கள் என்றாலே ஆணாதிக்க சினிமாவாகவே இருந்தது என்றும். ஹீரோக்களின் பெயர்களிலேயே கதைகள் இருந்ததாகவும், ஹீரோயின்கள் வெறும் கவர்ச்சி காட்டவும், காதல் காட்சிகளில் நடிக்க மட்டுமே பயன்படுத்த பட்டது தன்னை மிகவும் பாதித்ததாக கூறியுள்ளார்.

    பெண்களே இல்லை

    பெண்களே இல்லை

    பாலிவுட்டில் எல்லாம் நடிகைகளுக்கு நிச்சயம் ஒரு பெண் உதவியாளரை கூடவே வைத்திருப்பார்கள். ஆனால், தான் நடித்த ஒரு படத்தில் வேறு எந்த பெண் கதாபாத்திரமே இல்லை என்றும் சிகை அலங்காரம், மேக்கப் என அனைத்திலும் ஆண்களே இருந்தார்கள், ஒரு பெண் உதவியாளரை கூட எனக்கு கொடுக்கவில்லை. அந்த செட்டை பார்த்தாலே மிகவும் பயம் எடுத்தது. பின்னர், என் தோழி ஒருவரை நான் வரச் சொல்லி என் அருகிலே வைத்துக் கொண்டு அந்த படத்தை முடித்தேன் எனவும் கூறியுள்ளார்.

    பிரபாஸ் படத்திலும்

    பிரபாஸ் படத்திலும்

    கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் தலைவி படத்தில் மட்டுமின்றி, நடிகை பாக்யஸ்ரீ பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் பிரபாஸ் 20 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால், முன்பு போல இப்போது இல்லை. பெண்களை மையப்படுத்தும் சினிமாக்களும் தென்னிந்தியாவில் அதிகரித்து வருகின்றன என்றும் பாக்யஸ்ரீ கூறியுள்ளார்.

    English summary
    Popular Marathi actress Bhagyashree who recently roped into Kangana Ranaut’s Thalaivi talks about previously she faced sexism in south Indian film industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X