twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சும்மா கரிச்சுக் கொட்டாதீங்க.. 20 மரக்கன்றுகளை நட்டு அசத்திய ’தலைவி’ ஹீரோயின் கங்கனா ரனாவத்!

    |

    மும்பை: நடிகை கங்கனா ரனாவத் 20 மரக்கன்றுகளை நட்டுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.

    ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இன்ஸ்டாகிராமில் பதிவுகளை போட்டு வருகிறார் 'தலைவி' பட நடிகை கங்கனா ரனாவத்.

    ஆனால், இந்த முறை எதிர்ப்பு கருத்துக்களை பதிவிடாமல் 20 மரக்கன்றுகளை நடும் போட்டோக்களை பதிவிட்டு பாராட்டுக்களை அள்ளி உள்ளார்.

    ட்விட்டர் இல்லைன்னா என்ன

    ட்விட்டர் இல்லைன்னா என்ன

    ட்விட்டர் இல்லைன்னா என்ன இன்ஸ்டாகிராம் இருக்கே என தனது கருத்துக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் நடிகை கங்கனா ரனாவத். தொடர்ந்து எதிர்மறையான கருத்துக்களையும் கலவரம் தொடர்பான கருத்துக்களையும் பதிவிட்டதாகக் கூறி ட்விட்டர் கங்கனாவின் கணக்கை முடக்கியது.

    கொரோனாவிலிருந்து மீண்டார்

    கொரோனாவிலிருந்து மீண்டார்

    கொரோனா வைரஸ் பாதிப்பை லேசான பாதிப்பு தான் என பதிவிட்ட நடிகை கங்கனா ரனாவத், கொரோனாவை நிச்சயம் வென்று காட்டுவேன் என சவால் விடுத்ததை போலவே தற்போது வென்று காட்டி உள்ளார். கொரோனா நெகட்டிவ் என வந்ததை கங்கனா அறிவித்த நிலையில், அதனையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய, டெஸ்ட் ரிசல்ட்டையே பதிவிட்டு பலரது வாய்களை அடைத்தார்.

    70 சதவீத மரங்கள் சேதம்

    70 சதவீத மரங்கள் சேதம்

    சமீபத்தில் மும்பையை தாக்கிய டவ்தே புயல் காரணமாக 70 சதவீத மரங்கள் சேதமாகின என்றும், குஜராத்தில் மொத்தம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்கள் அழிந்தன என்றும் நடிகை கங்கனா ரனாவத் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார். இதனை தடுக்க அதிகாரிகளும் அரசுகளும் என்ன நடவடிக்கை எடுத்தன என்பதை நாம் கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    20 மரக்கன்றுகள்

    20 மரக்கன்றுகள்

    மேலும், தனது சார்பில் 20 மரக்கன்றுகளை நட்டுள்ளேன் என்றும், மக்கள் அனைவரும் இழப்புகளை ஈடு செய்யும் விதமாக மரக்கன்றுகளை நட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த மரங்கள் தான் நமக்கு தேவையான ஆக்ஸிஜன்களை வழங்கும் என்றும் கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளார்.

    இந்த மரங்களை நடுங்கள்

    இந்த மரங்களை நடுங்கள்

    மேலும், ஷோவுக்காக மரங்களை நடாமல் வேம்பு, அரசமரம், ஆலமரம் போன்ற வேர்கள் மேலோங்கி வரும் மரங்களை நடுங்கள் என்றும், இவை பல காலம் இந்த பூமியில் வாழும் மக்களுக்கு சுவாசிக்கத் தேவையான நல்ல ஆக்ஸினை வழங்கும் என்றும் கூறியுள்ளார்.

    இஷா குப்தா பாராட்டு

    இஷா குப்தா பாராட்டு

    நடிகை கங்கனா ரனாவத் எதிர்மறை கருத்துக்களை கூறி வந்த நிலையில், பலரும் அவரை ட்ரோல் செய்தனர். இந்நிலையில், தற்போது அவர் செய்திருக்கும் நல்ல காரியத்தை பார்த்த பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். நடிகை இஷா குப்தா உள்ளிட்ட பிரபலங்களும் இந்த போஸ்ட்டை லைக் செய்துள்ளனர்.

    English summary
    Kangana Ranaut planting 20 saplings after Tauktae cyclone sweeps many trees in Mumbai and Gujarat. She also asks people to do planting trees for the future generations.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X