இதத்தான் இவ்வளவு நாளா ஒட்ட வச்சிட்டு இருந்தீங்களா.. தலைவி ஃபர்ஸ்ட் லுக் டீஸர் ரிலீஸ்!
Recommended Video
சென்னை: ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகியுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக்கை தலைவி எனும் தலைப்பில் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கி வருகிறார். இதில், கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடித்துள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை பார்த்தவர்கள் இது மறைந்த முதல்வர் ஜெயலலிதா மாதிரி இல்லையே என்று ட்ரோல் செய்து வருகின்றனர்.
தலைவி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தவுடன் அவரது வாழ்க்கை வரலாறை படமாக இயக்க பலரும் முனைந்து வருகின்றனர். அதில் பிரம்மாண்ட பொருட்செலவில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை ஜெயலலிதாவாக நடிக்க வைத்து தலைவி என்ற தலைப்பில் ஏ.எல். விஜய் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் இல்லாமல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை யாராலும் எடுக்க முடியாது. தலைவி படத்தில் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர்., ஆக நடித்து வருகிறார் என்ற செய்தி நாம் முன்பே அறிந்தது தான். சமீபத்தில், எம்.ஜி.ஆர்., லுக்கில் க்ளின் ஷேவில் இருக்கும் அரவிந்த் சாமியின் புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
ஃபர்ஸ்ட் லுக்
எந்தவொரு முன் அறிவிப்புமின்றி தலைவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீரென வெளியிடப்பட்டுள்ளது. முதலில் இது அதிகாரப்பூர்வ லுக் தானா என்பது பார்க்கும் அனைவருக்கும் தோன்றியிருக்கும். ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் தற்போது இந்த ஃபர்ஸ்ட் லுக்கை பகிர்ந்து வருகின்றனர். நடிகையாகவும், தலைவியாகவும் கங்கனா இருக்கும் புகைப்படம் ஃபர்ஸ்ட் லுக்காக வெளியாகியுள்ளது.
எப்போ ரிலீஸ்
ஏ.எல். விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தலைவி படம் அடுத்த ஆண்டு ஜூன் 26ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தலைவி டீஸர்
கங்கனா ரனாவத் நடிப்பில் நடிகை ஜெயலலிதா மற்றும் தலைவி ஜெயலலிதா லுக்கில் கங்கனா ரனாவத் நடித்திருக்கும் 1 நிமிடம் 32 நொடிகள் கொண்ட சின்ன டீஸர் வெளியாகியுள்ளது. இளம் வயது ஜெயலலிதாவாக காட்டும் போதும், முதலமைச்சர் ஜெயலலிதாவாக கங்கனாவை காட்டும் போது கொஞ்சம் கூட செட் ஆகவில்லையே, சாவித்ரி பயோபிக் எப்படி இருந்தது என்று தான் சொல்லத் தோன்றுகிறது.


Click it and Unblock the Notifications











