twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கருணாநிதிக்கு கை தட்டாத ஜெயலலிதா.. எம்ஜிஆருக்கு கை தட்டும் காட்சி.. வைரலாகும் தலைவி ஸ்நீக் பீக்!

    |

    சென்னை: அறிஞர் அண்ணா கருணாநிதியையும் எம்ஜிஆரையும் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் அட்டகாசமான தலைவி ஸ்நீக் பீக் காட்சி யூடியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடித்துள்ள தலைவி திரைப்படம் திரையரங்குகளில் நாளை முதல் வெளியாகிறது.

    ஏற்கனவே தலைவி படத்தின் ப்ரீமியர் காட்சிகள் வெளியிடப்பட்டு விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில், தலைவி படத்தின் ரிலீசுக்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

    டாக்டர் பெண்ணை கரம் பிடித்த பிரபல இயக்குநர்.. சிவகார்த்திகேயன் முதல் சிவா வரை.. பிரபலங்கள் வாழ்த்து!டாக்டர் பெண்ணை கரம் பிடித்த பிரபல இயக்குநர்.. சிவகார்த்திகேயன் முதல் சிவா வரை.. பிரபலங்கள் வாழ்த்து!

    ஜெயலலிதாவாக கங்கனா

    ஜெயலலிதாவாக கங்கனா

    ஜெயம் ரவியின் தாம்தூம் படம் மூலமாக தமிழில் அறிமுகமான கங்கனா ரனாவத் பாலிவுட் நடிகையாக இத்தனை காலம் கலக்கி வந்த நிலையில், மீண்டும் தமிழில் நடித்துள்ள படம் தான் தலைவி. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடித்து அசத்தி உள்ளார் கங்கனா ரனாவத்.

    அட்டகாசமான சீன்

    அட்டகாசமான சீன்

    நாடு முழுவதும் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள தலைவி படத்தின் அட்டகாசமான ஸ்நீக் பீக் சீன் தற்போது யூடியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை ஜெயலலிதாவாக இந்த காட்சியில் கங்கனா ரனாவத் எம்ஜிஆருடன் பேசும் வசனங்கள் மற்றும் முக்கியமான தலைவர்களின் மாஸான காட்சியும் இடம்பெற்றுள்ளது.

    கை தட்டவில்லை

    கை தட்டவில்லை

    பேரறிஞர் அண்ணா கருணாநிதியை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் காட்சி தற்போது வெளியாகி உள்ள ஸ்நீக் பீக்கில் இடம்பெற்றுள்ளது. காரில் இருந்து இறங்கி கூட்டத்தோடு கூட்டமாக அந்த நிகழ்வை பார்த்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதா கை தட்டாமல் பார்க்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

    Recommended Video

    Thalaivi Movie Review | Poster Pakiri | Filmibeat Tamil
    எம்ஜிஆருக்கு கை தட்டல்

    எம்ஜிஆருக்கு கை தட்டல்

    கருணாநிதியை தொடர்ந்து இங்கே வா ராமசந்திரா என அண்ணா எம்ஜிஆர் அழைத்து மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைக்க நடிகை ஜெயலலிதாவாக நடித்துள்ள கங்கனா ரனாவத் சந்தோஷமாக கைதட்டுவது போன்ற காட்சிகள் தலைவி படத்தில் இடம்பெற்றுள்ளன. அதன் பின்னர் எம்ஜிஆருடன் அவரது காரில் செல்கிறார் ஜெயலலிதா.

    அரசியல் வேண்டாம்

    அரசியல் வேண்டாம்

    அரசியலில் ஈடுபட்டு உங்க உடம்பை ரொம்பவே கெடுத்துக்குறீங்க என அக்கறையோடு கங்கனா ரனாவத் வசனம் பேச அசல் எம்ஜிஆரை போலவே நடித்துள்ள அரவிந்த் சாமி பெரியாரின் வழியை பின்பற்றவே நானும் கருணாவும் அரசியலுக்கு வந்தோம். நீயும் அரசியலுக்கு வா என அழைக்க நான் நிம்மதியாக இருப்பது பிடிக்கவில்லையா எனக்கு இந்த அரசியலே வேண்டாம்பா என ஒதுங்கும் காட்சி யூடியூபில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

    கலவையான விமர்சனங்கள்

    கலவையான விமர்சனங்கள்

    கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி உள்ள தலைவி படத்திற்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கலந்து கலவையான விமர்சனங்கள் வெளியாகி உள்ளன. பயோபிக் திரைப்படம் என்பதால் சில இடங்களில் திரைக்கதை தொய்வடைகிறது என்றும் இரண்டாம் பாதி திரைப்படம் தான் சூடுபிடிக்கிறது என்றும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

    ஸ்டியரிங்கை திருப்பியும்

    இந்த ஸ்நீக் பீக் காட்சியில் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் காருக்குள் பேசிக் கொண்டே போகும் காட்சி இடம்பெற்றுள்ளது. ரொம்ப நேரமாக அரவிந்த் சாமி காரின் ஸ்டியரிங்கை வளைத்து வளைத்து திருப்பியும் கார் எப்படி நேரா போகுது திமிங்கலம் என ரசிகர்கள் நோட் பண்ணி ட்ரோல் செய்து வருகின்றனர். அதே போல அந்த பாலமும் முடியாமல் நீண்டு கொண்டே போகிறது எப்படிங்க ஏ.எல். விஜய் என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன. ஸ்நீக் பீக்கையே இப்படி நோண்டுகின்றனர் என்றால் முழு படத்தையும் ரசிகர்கள் பார்த்து விட்டு நாளைக்கு என்னவெல்லாம் சொல்லப் போறாங்கன்னு வெயிட் பண்ணி பார்ப்போம்.

    English summary
    Popular Bollywood actress Kangana Ranaut starrer Thalaivi movie latest sneak peak have some strong political content scenes which goes viral in social media. Director AL Vijay directs former Tamil Nadu CM Jayalalitha biopic as Thalaivi will release on September 10 globally.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X