twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏஎல் விஜய்யின் தலைவி படத்துக்கு 'யூ' சான்றிதழ்... ஆகஸ்ட்டில் வெளியாக உள்ளதாக தகவல்

    |

    சென்னை : இயக்குநர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ளது தலைவி படம்

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் பயோ பிக் படமாக இந்த படம் உருவாகியுள்ளது.

    என்னோட கேரியர்ல மங்காத்தாவை விட 'மாநாடு' பெரிய ப்ராஜெக்ட்-இயக்குநர் வெங்கட் பிரபு என்னோட கேரியர்ல மங்காத்தாவை விட 'மாநாடு' பெரிய ப்ராஜெக்ட்-இயக்குநர் வெங்கட் பிரபு

    இந்த படம் தற்போது சென்சார் செய்யப்பட்டு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

    சிறப்பான படங்கள்

    சிறப்பான படங்கள்

    இயக்குநர் ஏஎல் விஜய் அஜித் நடித்த கிரீடம் படம் மூலம் தனது சினிமா கேரியரை துவக்கியவர். தொடர்ந்து மதராசப்பட்டினம், தெய்வத் திருமகன் உள்ளிட்ட படங்கள் மூலம் சிறப்பான டைரக்டராக அறியப்படுகிறார். மேலும் பிரபுதேவாவின் தேவி படத்தையும் சிறப்பான வகையில் இயக்கியிருந்தார்.

    ஜெயலலிதாபின் வாழ்க்கைப்படம்

    ஜெயலலிதாபின் வாழ்க்கைப்படம்

    இந்நிலையில் தற்போது மறைந்த புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பயோபிக் படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இயக்கி வருகிறார். இந்த படம் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் மற்றும் புரட்சித் தலைவர் எம்ஜிஆராக அரவிந்த் சாமி ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    யூ சான்றிதழ்

    யூ சான்றிதழ்

    இந்நிலையில் தலைவி என்ற பெயரில் உருவாகிவரும் இந்த படத்தின் தமிழ் வெர்ஷன் தற்போது சென்சார் செய்யப்பட்டு யூ சான்றிதழ் பெற்றுள்ளது. தயாரிப்பாளர்கள் விஷ்ணு வர்தன் இந்தூரி மற்றும் சைலேஷ் ஆர் சிங் ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

    ஆகஸ்ட்டில் வெளியீடு

    ஆகஸ்ட்டில் வெளியீடு

    இந்த படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி வெர்ஷன்களும் இன்னும் சில தினங்களில் அடுத்தடுத்து சென்சாருக்கு அனுப்பப்பட உள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஏப்ரல் 23ம் தேதியே இந்த படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக தற்போது ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    AL Vijay's Thalaivi movie censored with U certificate
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X