தலைவி படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை வாங்கிய பிரபல OTT நிறுவனங்கள்
சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாக வெளிவரவுள்ள திரைப்படம் தலைவி.
இந்த படத்தில் கங்கனா ரணவத் ஜெயலலிதாவாகவும், அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் ஆகவும் நடித்துள்ளனர்.
ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த படமானது ஏப்ரல் 23ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

கலைஞராக நாசர்
மேலும் இந்த படத்தில் ஆர்எம் வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும், ஜெயலலிதாவின் அம்மா சந்தியா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை பாக்யஸ்ரீயும், எம்ஜிஆரின் மனைவி ஜானகி கதாபாத்திரத்தில் மதுபாலாவும் நடித்துள்ளனர். முக்கியமாக கருணாநிதி கதாபாத்திரத்தில் நாசர் நடித்துள்ளார்.

கவர்ந்த வசனங்கள்
படத்தின் நாயகி கங்கனா ரணவத் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் வெளியான தலைவி படத்தின் ட்ரைலர் வைரலானது. "என்ன அம்மாவா பாத்திங்கனா என் இதயத்துல உங்களுக்கு இடம் இருக்கும்" என ஜெயலலிதாவாக கங்கனா ரணவத் பேசிய வசனங்கள் ரசிகர்களை கவர்ந்து.

சர்ச்சைக்குரிய காட்சி
தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் தலைவி ட்ரைலர் வெளியான நிலையில் சில சர்ச்சைக்குரிய காட்சிகள் ஹிந்தி ட்ரைலரில் மட்டும் இடம்பெற்றிருந்தது. அமைச்சர்கள் ஜெயலலிதாவின் முன் தலை குனிந்து வணங்குவது, சசிகலா
ஒரு காட்சியில் ஜெயலலிதா பின்னாடி நிற்பது போன்ற காட்சிகள் தமிழ் ட்ரைலரில் இடம்பெறவில்லை.

ஸ்ட்ரீமிங் ரைட்ஸ்
சட்ட மன்ற தேர்தல் வரும் வேளையில் ஒரு புறம் தலைவி ட்ரைலர் வைரலாக, படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை பிரபல OTT நிறுவனங்களான நெட்பிலிக்ஸ் & அமேசான் ப்ரைம் கைப்பற்றியுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அமேசான் ப்ரைமிலும், ஹிந்தி மொழியில் நெட்பிலிக்ஸிலும் தலைவி திரைப்படம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.


Click it and Unblock the Notifications











