தலைவியா, குயினா எந்த டீஸர் பெஸ்ட்? ஜெயலலிதா நினைவு நாளைக்கு வெயிட்டான சம்பவம் இருக்கு!

Recommended Video

Queen | Mx Player Series | Ramya Krishnan | Official Teaser

சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள குயின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும், ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு வரும் டிசம்பர் 5ம் தேதி குயின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எக்ஸ். பிளேயர் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியாகவுள்ள குயின் வெப் சீரிஸ் டீஸர், ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கனா நடிப்பில் வெளியான தலைவி டீஸரை விட அருமையாக உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தலைவி ஃபர்ஸ்ட் லுக் டீஸர்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி' எனும் தலைப்பில் படமாக உருவாகி வருகிறது. ஏ.எல். விஜய் இயக்கத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடித்துள்ள ஃபர்ஸ்ட் லுக் டீஸர் அண்மையில் வெளியானது. ஆனால், அந்த ஃபர்ஸ்ட் லுக் டீஸரில், கங்கனாவின் உருவம் கார்ட்டுன் பொம்மை போல இருந்ததாக ரசிகர்கள் ட்ரோல் செய்தனர்.

குயின் டீஸர்

இந்நிலையில், கெளதம் மேனன் இயக்கத்தில் வெப்சீரிஸாக உருவாகியுள்ள குயின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்த வெப் சீரிஸில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள டீஸரில் ரம்யா கிருஷ்ணனின் முகத்தை காண்பிக்காமல், பின் பக்கம், டாப் ஆங்கிள் என காட்டி, ஜெயலலிதாவின் சாயலை கொண்டு வந்துள்ளனர்.

டிரைலர் எப்போ?

டிரைலர் எப்போ?

கெளதம் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள வெப் சீரிஸ் விரைவில் எம்.எக்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியாக உள்ளது. ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5ம் தேதி டிரைலர் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது நல்லா இருக்கு

ஏ.எல். விஜய், கங்கனா வெர்ஷனுக்கு இந்த டீஸர் நல்லா இருக்கிறது என இந்த நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார்.

1000 டைம்ஸ் பெட்டர்

கங்கனா ரனாவத்தின் தலைவிக்கு குயின் டீஸர் 1000 டைம்ஸ் பெட்டர் என்றும், கெளதம் மேனன் சிறந்த இயக்குநர், குயினுக்காக காத்திருக்கிறோம் என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

முகத்தை காட்டவில்லையே

ஸ்கூல் டாப்பர், சூப்பர்ஸ்டார் ஹீரோயின், இளம் வயது முதல்வர் என மூன்று கட்டங்களாக ஜெயலலிதாவின் வாழ்க்கையை காண்பித்துள்ள டீஸரில், ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள முகத்தை காண்பிக்க வில்லையே என இந்த நெட்டிசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X