twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் தள்ளிப்போன தலைவி ரிலீஸ் தேதி..கொரோனாவால் தொடரும் ஏமாற்றம்!

    |

    சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாக வெளிவரவுள்ள திரைப்படம் தலைவி.

    Recommended Video

    KANGANA முன்னாடி நடிக்க பயமா இருக்கும் |Actor Samuthirakani | Thalaivi Pressmeet| Filmibeat Tamil

    இந்த படத்தில் கங்கனா ரணாவத் ஜெயலலிதாவாகவும், அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் ஆகவும் நடித்துள்ளனர்.

    பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை அடிச்சு ஓடவிட்ட தனுஷ்.. கர்ணன் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை அடிச்சு ஓடவிட்ட தனுஷ்.. கர்ணன் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

    ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த படமானது ஏப்ரல் 23ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளிவரவிருந்தது.

    கலைஞராக நாசர்

    கலைஞராக நாசர்

    மேலும் இந்த படத்தில் ஆர்.எம்.வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும், ஜெயலலிதாவின் அம்மா சந்தியா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை பாக்யஸ்ரீயும், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி கதாபாத்திரத்தில் மதுபாலாவும் நடித்துள்ளனர். முக்கியமாக கருணாநிதி கதாபாத்திரத்தில் நாசர் நடித்துள்ளார்.

    நீண்ட காலமாக

    நீண்ட காலமாக

    இந்த படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் கடந்த வருடமே கிட்ட தட்ட முடிவடைந்தது. ஜூன் 26, 2020 தலைவி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா தொற்று, லாக் டவுன் போன்ற காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோடப்பட்டது.

    இணையத்தில் வைரல்

    இணையத்தில் வைரல்

    படத்தின் நாயகி கங்கனா ரணாவத் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம் தலைவி படத்தின் ட்ரைலர் வெளியானது. தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் தலைவி ட்ரைலர் வெளியான நிலையில் சில சர்ச்சைக்குரிய காட்சிகள் ஹிந்தி ட்ரைலரில் மட்டும் இடம்பெற்றிருந்தது இணையத்தில் வைரலானது.

    தொடரும் ஏமாற்றம்

    தொடரும் ஏமாற்றம்

    படத்தின் ட்ரைலர் வெளியான போதே ரிலிஸ் தேதி ஏப்ரல் 23 என உறுதியானது. ஆனால் தற்போது கொரோனா இரண்டாம் அலை தொடர்ந்து வேகமாக பரவி வருவதால் திரையரங்குகளில் 50 % இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் படக்குழு படத்தை மீண்டும் தள்ளிப்போடுவதாக அறிவித்து ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

    English summary
    Thalaivi release postponed due to rising covied19
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X