Don't Miss!
- News
அடுத்த மூவ் என்ன? ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பரபர ஆலோசனை
- Lifestyle
ஆண்களே! உங்க அக்குள் பகுதி அசிங்கமா கருமையா மாறாம தடுக்க... நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Sports
விராட் கோலி இனி தேவையில்லை.. இவருக்கு இனி வாய்ப்பு கொடுங்க.. தினேஷ் கார்த்திக் கருத்து
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கட்சி பார்டர் போட்ட சேலையுடன்... 'தலைவி' 2 வது லுக்... இதில் எப்படி இருக்கிறார் 'அம்மா' கங்கனா?
சென்னை: தலைவி படத்தில் நடிகை கங்கனாவின் இரண்டாவது தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.
Recommended Video
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை சினிமாவாக்கப்பட்டு வருகிறது. இதை இயக்குனர் விஜய், தலைவி என்ற பெயரில் இயக்கி வருகிறார்.
ஜெயலலிதாவாக இந்தி நடிகை கங்கனா ரனவத் நடிக்கிறார். இவர் தமிழில், ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்தவர்.
நான்
அத்தனை
முறை
சொல்லியும்
அவங்க
கேட்கல..
இந்தியன்
2
விபத்து..
கிரேன்
ஆபரேட்டர்
பகீர்
வாக்குமூலம்!

ஜானகியாக மதுபாலா
எம்.ஜி.ஆர். ஆக, அரவிந்த்சாமி நடிக்கிறார். அவர் மனைவி ஜானகி ராமசந்திரனாக மதுபாலா நடிக்கிறார். ரோஜா படத்துக்கு பிறகு மதுபாலாவும் அரவிந்த் சாமியும் இதில் இணைந்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சாய்லேஷ் சிங் தயாரிக்கின்றனர்.

அரவிந்த்சாமி
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் கங்கனாவின் தோற்றத்தை ரசிகர்கள் விமர்சித்திருந்தனர். பின்னர் 'எம்ஜிஆர் லுக்' போஸ்டரை படக்குழு வெளியிட்டது. எம்.ஜி.ஆர்.பிறந்த நாளை முன்னிட்டு இந்த போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் அரவிந்த் சாமி, அப்படியே எம்.ஜி.ஆர் போலவே இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறினர்.
|
நடனம் ஆடும் ஸ்டில்கள்
ஸ்பெஷல் டீசர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டது. அதிலும் அரவிந்த் சாமியின் தோற்றம் எம்.ஜி.ஆர் போலவே இருப்பதாக ரசிகர்கள் கூறினர். இதையடுத்து அந்த போஸ்டரும் டீசரும் டிரெண்ட் ஆனது. இதற்கிடையே இந்தப் படத்துக்காக கங்கனா நடனம் ஆடும் ஸ்டில்கள் வெளியாகின. அதுவும் வரவேற்பை பெற்றது.
|
கங்கனாவின் 2 வது லுக்
இந்நிலையில் ஜெயலலிதாவாக வரும் கங்கனா ரணவத்தின் 2-வது லுக் தற்போது வெளியாகி உள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த லுக்கை வெளியிட்டுள்ளனர். இதில், அ.தி.மு.க கட்சி கொடி நிறத்தில் பார்டர் போட்ட சேலை அணிந்துள்ளார் கங்கனா. இந்த தோற்றம் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி உள்ளனர்.

எப்படி மயக்கலாம்
ஆஹா என்னவொரு மாற்றம், இதற்காகத்தான் கங்கனாவை பர்பக்ஷனிஸ்ட் என்று சொல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் ஒரு ரசிகர். பர்ஸ்ட் லுக் டீசரை விமர்சித்தவர்களுக்கு இந்த லுக் பதிலடி. ரசிகர்களை எப்படி மயக்கலாம் என்று கங்கனாவுக்கு தெரியும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த லுக் வைரலாகி வருகிறது.