twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கிளைமாக்ஸ் காட்சிக்கு சுமார் 300 பேர்.. லாக்டவுனுக்கு பிறகும்.. 'தலைவி'க்கு இப்படியொரு சிக்கல்!

    By
    |

    சென்னை: 'தலைவி' கிளைமாக்ஸில் 300 பேர் பங்கேற்க வேண்டும் என்பதால் அதன் படப்பிடிப்பை லாக்டவுனுக்கு பிறகும் உடனடியாக தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    Recommended Video

    SHORT HAIR SWEETIES| HEROINES WITH SHORT HAIR| FILMIBEAT TAMIL

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை, தலைவி என்ற பெயரில் படமாக்கப்படுகிறது.

    விஜய் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக, இந்தி நடிகை கங்கனா ரனவத் நடிக்கிறார்.

    5 படங்கள் தொடர்ந்து ஹிட்.. ரூ.352 கோடியை அள்ளிய வசூல்..வெற்றிகரமான ஹீரோயின் ஆன பிரபல நடிகை!5 படங்கள் தொடர்ந்து ஹிட்.. ரூ.352 கோடியை அள்ளிய வசூல்..வெற்றிகரமான ஹீரோயின் ஆன பிரபல நடிகை!

    ஜி.வி.பிரகாஷ்குமார்

    ஜி.வி.பிரகாஷ்குமார்

    எம்.ஜி.ஆர். ஆக, அரவிந்த்சாமி, அவர் மனைவி ஜானகி ராமச்சந்திரனாக மதுபாலா நடிக்கின்றனர். ரோஜா படத்துக்கு பிறகு மதுபாலாவும் அரவிந்த் சாமியும் இதில் இணைந்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் சிங் தயாரிக்கின்றனர்.

    நாடாளுமன்றம்

    நாடாளுமன்றம்

    படத்தை, இந்த மாதம் 26 ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால் கொரோனா லாக்டவுன் மொத்தமாக அனைத்தையும் மாற்றி அமைத்துள்ளது. இதனால் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்பட முடியாமல் இருக்கிறது. இந்தப் படத்துக்காக, ஐதராபாத்தில் உள்ள ராமகிருஷ்ணா சினி ஸ்டூடியோவில், நாடாளுமன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது.

    லாக்டவுன் முடியும்

    லாக்டவுன் முடியும்

    சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில், அண்ணாசாலையை அப்படியே உருவாக்கி இருக்கிறார்கள்.
    லாக்டவுன் காரணமாக, இந்த செட் பயன்படுத்தப்படாமல் இருப்பதால் பாதிக்கப்படும் என்று தயாரிப்பாளர்களில் ஒருவரான சைலேஷ் சிங் கூறியிருந்தார். விஷ்ணுவர்தன் இந்துரி, 'இன்னும் 40 சதவிகித படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது. எப்போது லாக்டவுன் முடியும் என்று தெரியவில்லை' என்று தெரிவித்திருந்தார்.

    விதிமுறை படி

    விதிமுறை படி

    இந்நிலையில், பாலிவுட்டில் வரும் 15 ஆம் தேதி முதல், மாநில அரசு வகுத்துள்ள வழிகாட்டுதலின்படி, படப்பிடிப்புகள் படிப்படியாகத் தொடங்க இருக்கிறது. இதற்காக தயாரிப்பாளர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தலைவி கிளைமாக்ஸ் காட்சிக்கு 300 பேர் வேண்டும் என்பதால், அரசு விதிமுறையின்படி அவ்வளவு பேரை படப்பிடிப்பில் பங்கேற்க வைக்க முடியாத நிலை உள்ளது.

    கிளைமாக்ஸ் காட்சி

    கிளைமாக்ஸ் காட்சி

    'சட்டசபையில் இருந்து ஜெயலலிதா வெளியே வருவது போல கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது பெரும் கூட்டம் கூடி இருப்பது போல காட்சியை படமாக்க வேண்டும். இதற்கு சுமார் 300 பேரை பயன்படுத்த முடிவு செய்திருந்தனர். ஆனால் அத்தனை பேரை பயன்படுத்த அனுமதி இல்லை என்பதால் கொரோனா பிரச்னை முழுவதுமாக முடிந்த பின் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    English summary
    Kangana Ranaut Starrer Thalaivi Unable To Resume Shoot As Climax Requires Over 300 Extras
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X